"அவர்" தான் கேம் பிளான் பண்றாருன்னு தோணுது!- சம்யுக்தா பிரிந்தது பற்றி முதல் முறை மனம் திறந்த விஷ்ணுகாந்த்! ட்ரெண்டிங் வீடியோ

சம்யுக்தா பிரிந்தது பற்றி முதல் முறை மனம் திறந்த விஷ்ணுகாந்த்,vishnukanth opens about why he seperated from samyutha | Galatta

திருமணமான இந்த குறுகிய நாட்களிலேயே இந்த பிரிவு ஏற்படவும், சம்யுக்தா இப்படி முற்றிலுமாக மாறியதற்கும் அவரது தந்தையே காரணமாக இருக்கலாம் என தோன்றுவதாக விஷ்ணுகாந்த் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து எனும் மெகா சீரியல் நடித்து வந்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் ஆகிய சில வாரங்களிலேயே, சொல்லப்போனால் சில நாட்களிலேயே இவர்கள் இருவரும் பிரிந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சம்யுக்தா மறைமுகமாக சில பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட, விஷ்ணுகாந்த் இது குறித்து முதல் முறையாக மனம் திறந்து தற்போது பேசியிருக்கிறார். 

நமது கலாட்டா தமிழ் சேனலில் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட விஷ்ணுகாந்த் நம்மோடு பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், “வெளியில் சொல்லும் அளவிற்கு  பிரச்சினை ஒன்றுமே கிடையாது. இந்த அளவிற்கு வரக்கூடாது வெளியில் எல்லாம் சொல்லக்கூடாது இது ஒரு பிரச்சனையே கிடையாது சொல்லப்போனால்… நானும் பொறுமையாக இருக்கலாம் என்றுதான் இத்தனை நாட்களாக பொறுமையாக இருந்தேன். "NO MORE SILENCE" என பதிவிட்டதும் கூட ஒன்றரை மாதமாக நான் மௌனமாக தான் இருந்தேன்.” என்ற விஷ்ணுகாந்திடம், "திருமணமாகியே இரண்டு மாதங்கள் தானே ஆகிறது?" என கேட்டபோது, “உங்களுக்கு இதுவே ஷாக்காக இருக்கிறதல்லவா? எங்களுக்கு மார்ச் 3ம் தேதி திருமணம் ஆனது. மார்ச் 9ம் தேதி சென்னை வந்தோம். மார்ச் 25 வரை தான் இவர் வீட்டில் இருந்தார். வெறும் 15 நாட்கள் தான் இருந்தார். அதற்கு முன்பு ஆறு ஏழு மாதங்களாக நாங்கள் காதலித்திருந்தோம். கல்யாணமான பிறகு இந்த 15 நாட்களில் எப்படி மொத்தமாக இவ்வளவு தூரம் மாறினார்கள் என்பது தான் தெரியவில்லை.” என்றார்.

தொடர்ந்து பேசிய விஷ்ணுகாந்த், “அப்பாவே கிடையாது எனக்கு அப்பா இல்லை அம்மா இந்த மாதிரி இருக்கிறார்கள் என சொல்லி பழகிய பெண். சரி அப்பா இல்லாத பெண் என கல்யாண செலவு எல்லாம் நானே ஏற்றுக்கொண்டு, ஒரு பைசா கூட நான் வாங்கவில்லை. இவ்வளவு நாட்களாக ஒரு 8 ஆண்டுகளாக நான் சென்னையில் இருந்து சம்பாதித்த மொத்த பணத்தையும் கல்யாண செலவுக்கு செலவு செய்து விட்டேன். பணம் போனால் அது விஷயம் கிடையாது, மனதில் நிம்மதி இல்லை. இதெல்லாம் ஒரு பிரச்சினையா என எனக்கே தோன்றுகிறது. இவ்வளவு நாட்களாக இல்லாத அப்பா, விட்டு விட்டு சென்ற அப்பா இப்போது வந்துவிட்டார். அவரே சில பேட்டிகளில் சொல்லி இருப்பார் எனக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான் என சொல்லி இருப்பார். பேட்டியிலேயே அப்படி சொல்லும்போது தனிப்பட்ட முறையில் என்னிடம் என்னென்ன சொல்லி இருப்பார். அவர்களுடைய குடும்ப விஷயம் நமக்கு அது தேவையில்லாதது. இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் அவருடைய அப்பா தான் முக்கியமாக கேம் பிளே பண்ணுகிறாரோ என தோன்றுகிறது. முழுக்க முழுக்க அவருடைய அப்பா தான். அவருடைய அப்பா பேச்சை கேட்டுக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது." என தெரிவித்துள்ளார். சம்யுக்தாவின் தந்தை குறித்தும் இந்த பிரச்சினை தொடர்பாக இன்னும் பல முக்கிய விஷயங்களையும் பகிர்ந்து கொண்ட விஷ்ணுகாந்தின் அந்த முழு பேட்டி இதோ…
 

‘நான் 10கிலோ இவர் 12கிலோ எடை குறைத்தோம்!’- பா.ரஞ்சித்தின் ஸ்போர்ட்ஸ் பட அனுபவங்களை பகிர்ந்த சாந்தனு - ப்ரித்வி! வைரல் வீடியோ
சினிமா

‘நான் 10கிலோ இவர் 12கிலோ எடை குறைத்தோம்!’- பா.ரஞ்சித்தின் ஸ்போர்ட்ஸ் பட அனுபவங்களை பகிர்ந்த சாந்தனு - ப்ரித்வி! வைரல் வீடியோ

தனுஷின் '100 கோடி' பிளாக்பஸ்டர் பட இயக்குனரோடு கைகோர்க்கும் துல்கர் சல்மான்... அசத்தலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

தனுஷின் '100 கோடி' பிளாக்பஸ்டர் பட இயக்குனரோடு கைகோர்க்கும் துல்கர் சல்மான்... அசத்தலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சூர்யாவின் மிரட்டலான ஆக்ஷன் ட்ரீட்டாக தயாராகும் கங்குவா... கொடைக்கானல் படப்பிடிப்பு குறித்து வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

சூர்யாவின் மிரட்டலான ஆக்ஷன் ட்ரீட்டாக தயாராகும் கங்குவா... கொடைக்கானல் படப்பிடிப்பு குறித்து வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட் இதோ!