பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து லைகாவின் அடுத்த படைப்பு... கவனம் ஈர்க்கும் ஜெய்யின் புதிய பட அசத்தலான வீடியோ பாடல் இதோ!

ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷின் தீரா காதல் பட வாலு பார்ட்டி வீடியோ பாடல்,Jai aishwarya rajesh in theera kaadhal movie vaalu party video song | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாக தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், பொன்னியின் செல்வனை தொடர்ந்து அடுத்த படைப்பாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இருந்து வெளிவருகிறது தீராக் காதல். ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவடா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் தீராக் காதல் திரைப்படத்திலிருந்து தற்போது சர்ப்ரைஸாக புதிய வீடியோ பாடல் வெளியானது.

முன்னதாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை தயாரிக்கும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படைப்புகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படமாக உருவாகும் லால் சலாம் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அதேப்போல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா தயாரித்து வருகிறது. இந்தியன் 2 திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டில் தீபாவளி வெளியீடாக ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வரிசையில் ரசிகர்கள் விரும்பும் வகையிலான முக்கோண காதல் கதையை மையமாக வைத்து ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து மற்றும் ஷிவடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள தீராக் காதல் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. அதே கண்கள் மற்றும் பெட்ரோமேக்ஸ் படங்களின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் தீராக் காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவில், பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்துள்ள தீராக் காதல் படத்திற்கு சித்து குமார் இசை அமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த தீராக் காதல் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வருகிற மே 26 ஆம் தேதி தீராக் காதல் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

இந்நிலையில் தீராக் காதல் திரைப்படத்தின் ஸ்பெஷல் ட்ரீட்டாக வாலு பார்ட்டி எனும் வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் SN.அனுராதா அவர்களின் வரிகளில் சத்திய பிரகாஷ் மற்றும் பிரார்த்ன்னா ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடல் தற்போது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. பள்ளிக்குச் செல்லும் குழந்தையோடு சேர்ந்து, பள்ளியையும் ஆபீஸையும் கட் அடித்து விட்டு அப்பா - மகள் இருவரும் ஊர் சுற்றுவதும் தங்களுடைய அந்த நாளை கொண்டாடுவதுமாக வெளிவந்திருக்கும் இந்த பாடல் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. கலக்கலான அந்த வாலு பார்ட்டி வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.
 

சினிமா

"பிரபல நடிகையை கரம் பிடித்த நாடாளுமன்ற MP!"- கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ!

'வேகமெடுக்கும் சுந்தர்Cயின் அரண்மனை 4!'- தமன்னா கொடுத்த மாஸ் அப்டேட்... வைரலாகும் புது SHOOTING SPOT GLIMPSE இதோ!
சினிமா

'வேகமெடுக்கும் சுந்தர்Cயின் அரண்மனை 4!'- தமன்னா கொடுத்த மாஸ் அப்டேட்... வைரலாகும் புது SHOOTING SPOT GLIMPSE இதோ!

ரசிகர்கள் கொண்டாடிய 'ராக்கி' படம் ஓடிடி ரிலீஸ் எப்போது..? - கேப்டன் மில்லர் இயக்குனர் கொடுத்த பதில்.. வைரல் பதிவு இதோ..
சினிமா

ரசிகர்கள் கொண்டாடிய 'ராக்கி' படம் ஓடிடி ரிலீஸ் எப்போது..? - கேப்டன் மில்லர் இயக்குனர் கொடுத்த பதில்.. வைரல் பதிவு இதோ..