'ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது.. ஏற்கனவே என் உடம்புல 106 தையல்!'- ஹரியின் விஷால்34 பட அதிரடி அப்டேட் கொடுத்த விஷால்! வைரல் வீடியோ

ஹரியின் விஷால்34 பட அதிரடி அப்டேட் கொடுத்த விஷால்,vishal shared a update of vishal34 movie with director hari | Galatta


இயக்குனர் ஹரியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் விஷால் 34 திரைப்படம் குறித்த முக்கிய தகவல்களை நடிகர் விஷால் பகிர்ந்து கொண்டார்.தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்க வித்தியாசமான கேங்ஸ்டர் கதைக்களத்தில்  சயின்ஸ் பிக்சன் மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. 

இந்த வரிசையில் அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 34-வது திரைப்படமாக உருவாகும் #விஷால்34 திரைப்படத்தில் இயக்குனர் ஹரியுடன் இணைகிறார் விஷால். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் கமர்சியல் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஹரியுடன் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷால் இணையும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் படப்பூஜை நடைபெற்றது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் விஷால் 34 திரைப்படத்தை அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியன் ஆகியோரும் இணைந்து தயாரிக்கின்றனர். M.சுகுமார் அவர்களின் ஒளிப்பதிவில், உருவாகும் அதிரடி படமான விஷால் 34 படத்திற்கு திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் தனியார் கல்லூரி ஒன்றில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் சிறப்பு விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மருத்துவ மாணவர்களான ரசிகர்கள் படக்குழுவினரிடம் கேள்விகள் கேட்க அதற்கு பட குழுவினரும் பதில் அளித்து வந்தனர். அந்த வகையில் நடிகர் விஷாலிடம் மாணவி ஒருவர், “34வது திரைப்படம் வருகிறது அதன் போஸ்டரை வெளியிட்டு இருந்தார்கள்  இயக்குனர் ஹரி சார் இயக்குகிறார் அந்தப் போஸ்டரில் ஸ்டெதஸ்கோப் இருக்கிறது மருத்துவ கல்லூரிக்கு வந்திருக்கிறீர்கள் எனவே அந்த படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்..” என கேட்டபோது,  

“மூன்றாவது முறையாக ஹரி சாருடன் இணைகிறேன்  முதல் இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது உங்கள் ஆதரவால், தாமிரபரணி மற்றும் பூஜை இரண்டும்… இப்போது மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறோம். கண்டிப்பாக ஹரி சார் படத்தில் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது. எப்போது மீண்டும் அக்கவுண்ட் ஆரம்பிக்கும் என காத்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே 106 தையல்கள் இருக்கிறது என் உடம்பில் அடிபடாத இடமே கிடையாது. எப்போது மறுபடியும் அக்கவுண்ட் ஆரம்பிக்கும் என காத்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய படப்பிடிப்பு ஜனவரி இரண்டாம் தேதியில் இருந்து தொடங்குகிறது.  இதுவும் ஒரு பட்டாசான திரைப்படமாக தான் இருக்கும். ஹரி சாருடைய திரைப்படம் ஃபிரஷான ஒரு படம் என்று சொல்வேன்.” என பதில் அளித்துள்ளார். நடிகர் விஷால் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... படக்குழு வெளியிட்ட 10 நாள் வசூல் விவரம் இதோ!
சினிமா

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... படக்குழு வெளியிட்ட 10 நாள் வசூல் விவரம் இதோ!

ஆன் ஸ்கிரீனில் இணையாத தளபதி - புரட்சி தளபதி காம்போ அரசியலில் இணையுமா?- விஷாலின் சுவாரஸ்யமான பதில்! வைரல் வீடியோ
சினிமா

ஆன் ஸ்கிரீனில் இணையாத தளபதி - புரட்சி தளபதி காம்போ அரசியலில் இணையுமா?- விஷாலின் சுவாரஸ்யமான பதில்! வைரல் வீடியோ

'தனுஷ் ரசிகர்களே ரெடியாகிக்கோங்க!'- கில்லர் கில்லர்
சினிமா

'தனுஷ் ரசிகர்களே ரெடியாகிக்கோங்க!'- கில்லர் கில்லர் "கேப்டன் மில்லர்" பட அதிரடியான டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!