உலகின் 5வது பெரிய வைரத்தின் ரகசியத்தை உடைத்த தமன்னா..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..

விலையுயர்ந்த வைரம் குறித்த உண்மையை உடைத்த தமன்னா - Tamannah Bhatia about rumours of world 5th largest diamond | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தென்னிந்தியா முழுவதும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா  மட்டுமல்லாமல் சமீப காலமாக இந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தமன்னா நடிப்பில் இந்த ஆண்டு இந்தியில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜி கர்தா ஆகிய தொடர்கள் இணையத்தில் வெளியானது. அதையடுத்து தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் போலா ஷங்கர் படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்து வருகிறார். மேலும் தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 படத்திலும் தமன்னா நடித்து வருகிறார். தற்போது தமன்னா நடித்து வரும் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படமாக இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியாகவிருக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இருந்து வெளியான ‘காவலா’ பாடல் நாடு முழுவதும் டிரென்ட் ஆக தற்போது தமன்னா அதிகம் பேசப்படும் ஹீரோயின் பட்டியலில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் பெரிய வைரம் அணிந்து கொண்டு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் மிகப்பெரிய வைரம் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் அதிகளவு பகிர்ந்து வந்தனர். மேலும் வைரம் குறித்த பல தகவல்கள் இணையத்தில் வெளியானது. அந்த வைரம் உலகின் 5வது பெரிய வைரம் என்றும் அந்த மோதிரத்தின் மதிப்பு ரூ.2 கோடி என்று தகவல் வெளியானது. மேலும் இந்த மோதிரத்தை பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் மனைவி உபாசனா தமன்னாவிற்கு பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் பரவியது. கடந்த 2019ல் ராம் சரண் தயாரிப்பில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன், அனுஷ்கா ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை தமன்னாவும் நடித்திருந்தார்.

இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்கு ராம் சரண் மனைவி உப்பசன்னா தமன்னாவிற்கு பரிசாக விலையுயர்ந்த மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். என்று பல தகவல்கள் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் பரவி வந்த நிலையில் வைரம் குறித்த ரகசியத்தை உடைத்துள்ளார் நடிகை தமன்னா..

தமன்னா பகிர்ந்த தகவலின் படி, “இந்த ரகசியத்தை உடைப்பதை வெறுக்கிறேன்.. நாங்கள் பாட்டில் மூடியை கொண்டு ஒரு புகைப்படம் எடுத்தோம். அது உண்மையிலே வைரம் இல்லை.” என்று குறிப்பிட்டு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.  அதன்படி தமன்னா அணிந்திருப்பது விலையுயர்ந்த பெரிய வைரம் இல்லை என்றும் அது வெறும் பாட்டில் மூடி என்றும் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணீர் விட்டு அழுத சின்னத்திரை நடிகை ரச்சிதா..! ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்.. பின்னணி இதோ..
சினிமா

கண்ணீர் விட்டு அழுத சின்னத்திரை நடிகை ரச்சிதா..! ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்.. பின்னணி இதோ..

Threads ல் வரலாறு படைத்த முதல் இந்திய நடிகர் அல்லு அர்ஜுன்.. உற்சாகத்தில் ரசிகர்கள். விவரம் இதோ..
சினிமா

Threads ல் வரலாறு படைத்த முதல் இந்திய நடிகர் அல்லு அர்ஜுன்.. உற்சாகத்தில் ரசிகர்கள். விவரம் இதோ..

கால் இழந்த மாணவனுக்கு  இசையமைப்பாளர் டி இமான் செய்த உதவி..! – நெகிழ்ச்சியுடன் பாரட்டி வரும் ரசிகர்கள்..
சினிமா

கால் இழந்த மாணவனுக்கு இசையமைப்பாளர் டி இமான் செய்த உதவி..! – நெகிழ்ச்சியுடன் பாரட்டி வரும் ரசிகர்கள்..