விஜய் டிவியின் தொடர்களுக்கென்றும் அதன் நட்சத்திரங்களுக்கென்றும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.அப்படி விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பை தொடங்கி செம ஹிட் அடித்து வரும் தொடர் முத்தழகு.

மதிய நேரத்தில் ஒளிபரப்பானாலும் மக்கள் மனதில் இடம்பிடித்து விறுவிறுப்பாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.ஆஷிஷ் சக்கரவர்த்தி,ஷோபனா இருவரும் கதையின் முன்னணி நட்சத்திரங்களாக நடித்து வருகின்றனர்.லக்ஷ்மி வாசுதேவன்,ஆனந்த் பாபு என சீனியர் நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து ராஜ்மோகன், அட்ஷியா பாரதி,தர்ஷனா,சரத்,ஷாலினி ராஜன்,சைலு இம்ரான் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடர்.

சமீபத்தில் 100 எபிசோடுகளை இந்த தொடர் கடந்து சாதனை படைத்தது,இதனை முன்னிட்டு சீரியல் குழுவினர் இணைந்து கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடி வருகின்றனர்.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.