தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.

செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது.

பல சாதனைகளை அடித்து நொறுக்கி 200 மில்லியனை நோக்கி இந்த பாடல் நகர்ந்து வருகிறது.இந்த படத்தின் அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த படத்தின் இரண்டாவது பாடலான ஜாலியோ ஜிம்கானா என்ற இந்த பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் இந்த பாடலை பாடியுள்ளார்.இதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் செம வைரலாகி வருகிறது.பெரிய எதிர்பாப்புக்கிடையே வெளியாகியுள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம ஜாலியான இந்த பாடலும் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்