எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் படம் வலிமை. இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இரண்டு வருடங்கள் நெருங்கியிருக்கும் நிலையில் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படாமல் இருந்துவருகிறது. 

அதனால், அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக வலிமை பட அப்டேட் கேட்டு ட்விட்டரில் ஹேஷ்டெக் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அதனைக் கடந்து தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மோடியின் சென்னை வந்தபோது அவர்களிடம் என எல்லாரிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட் கேட்கத் தொடங்கினார்.

இதுகுறித்து அஜித் அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிலைமை சென்றது. அதனால், வலிமை பட அப்பேட் என்பது ஒரு தலைப்பு செய்தியானது. இந்தநிலையில், இதனைப் பயன்படுத்தி திருப்பூர் ஆட்சியர் கார்த்திகேயன் வாக்காளர்களுக்கு வாக்களிக்கவேண்டி கோரிக்கைவிடுத்துள்ளார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது என்று அவருடைய பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலிமை அப்டேட் என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி இதனைப் பதிவிட்டுள்ளார். மேலும், அவருடைய பதிவில் சென்று கமெண்ட் பதிவிட்ட அஜித் ரசிகர் ஒருவர், நான் என் வாழ்க்கையில் முதல் வாக்கு அளிக்க போகிறேன் வாழ்த்தலாமே சார் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விஜயகார்த்திகேயன், வாழ்த்துக்கள் pa.. நேர்மையா, வலிமையா, அட்டகாசமா, அமர்க்களமா vote போடுங்க என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பளார் யுவன்சங்கர் ராஜாவிடம் வலிமை அப்டேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், படத்தின் பாடல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மோஷன் போஸ்டர் உருவாக்கம் உள்ளிட்ட ப்ரோமோஷன் பணிகள்தான் இனி நடைபெற உள்ளன எனக் கூறினார்.