அதிரடி சரவெடி...வலிமை படத்தின் புதிய ப்ரோமோ இதோ !
By Aravind Selvam | Galatta | February 24, 2022 18:17 PM IST
தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள வலிமை படம் 2022 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தினை சதுரங்க வேட்டை,தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கியுள்ளார்.இதற்கு முன் இதே கூட்டணியின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துளளார்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி இன்று வெளியாகியுள்ளது.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் கோலாகலமாக இந்த பட ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.படத்தின் புதிய அதிரடி ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த அதிரடி ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Feel the heat of action-packed sequences of #Valimai on the big screen!💥
— Zee Studios (@ZeeStudios_) February 24, 2022
Watch it on the big screen in Tamil, Telugu, Kannada, and Hindi.
Book your tickets now - https://t.co/IFAljIwctwhttps://t.co/pE0Yomu11q#ValimaiInCinemas #Valimai240222#AjithKumar @BoneyKapoor pic.twitter.com/omvy6AP51k
VALIMAI FDFS Effect: This iconic theatre in Chennai damaged | Pictures here
24/02/2022 02:57 PM
One LAST Final TEASER of Ajith Kumar's Valimai and this looks electrifying!
23/02/2022 05:44 PM