சினிமாவில் அரசியல் ! அரசியலில் சினிமா ! இதை மட்டும் செய்ய வேண்டாமே! எச்.வினோத் கோரிக்கை.

சினிமாவில் அரசியல் ! அரசியலில் சினிமா ! director H Vinoth talks about not to link politics in cinema | Galatta

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் துணிவு. இதற்க்கு ஜிப்ரான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மஞ்சு வாரியர் , ஜான் கொக்கன் ,சமுத்திரக்கனி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். பொங்கல் வெளியீடாக நேற்று ஜனவரி 11ம் தேதி வெளியாகியுள்ள துணிவு அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

அண்மையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பேட்டியளித்த எச்.வினோதிடம் அரசியலில் சினிமா சினிமாவில் அரசியல் என்று கேட்கப்பட்ட போது, "எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல் பொதுமயம் ஆகக்கூடாது . துறையில் ஒருவர் தப்பு செய்தால் அந்த துறையையே தப்பு என்று சொல்ல கூடாது. ஒரு காவல் அதிகாரி தப்பு செய்தால் காவல்துறையை குற்றம் சொல்வது, ஒரு அரசியல்வாதி தப்பு செய்யதால் அரசியலையே குறைதான் என்று சொல்லும்பொழுது அந்த துறைக்கு வரவிருக்கும் ஆட்களும் வராமல் போய்விடுவார்கள். அரசியலே சரியில்லை
சாக்கடை தான் என்று சொல்லும்பொழுது யாரும் வராமல் போகும் நிலையில் அது இன்னும் சாக்கடையாக தான் மாறும். ஆகையால் தனிமனிதனை வைத்து பொதுமயம் செய்யவேண்டாம்," 
என்று கோரிக்கை விடுத்தார்.
 

தனுஷின் திருச்சிற்றம்பலம் ஜாலியான புது ப்ரோமோ வீடியோ வெளியீடு !
சினிமா

தனுஷின் திருச்சிற்றம்பலம் ஜாலியான புது ப்ரோமோ வீடியோ வெளியீடு !

‘தி ஃபேமிலி மேன்’-ன் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியீடு!
சினிமா

‘தி ஃபேமிலி மேன்’-ன் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியீடு!

நேரடியாக OTT-யில் வெளியாகும் ஸ்ருதிஹாசன் படம் ! டீஸர் வெளியீடு
சினிமா

நேரடியாக OTT-யில் வெளியாகும் ஸ்ருதிஹாசன் படம் ! டீஸர் வெளியீடு