"வாரிசால்" பறிபோன "துணிவு" வாய்ப்பு ! அவகாசம் கேட்டேன் - மனம் திறக்கும் நடிகர் ஷியாம்

2001 ஆம் ஆண்டு வெளியான 12 பி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்நடிகர் ஷியாம். இவர்தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். தற்போது தில்ராஜுதயாரிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கிய வாரிசு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. தளபதி விஜயுடன் இணைந்து ரஷ்மிக்கா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா மற்றும் பலர் நடித்துள்ளனர்  இதில் ஷியாம் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் துணிவு இயக்குனர் எச்.வினோத் தன்னை துணிவு படத்தில் வில்லனாக நடிக்க அழைப்பு விடுத்தார் என்றும் அதை என்னால் ஏற்க இயலாமல் போனதுக்கு காரணம் இதுதான் என்றும் விளக்கமளித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "இயக்குனர் எச்.வினோத் என்னை அழைத்து துணிவு படத்தில் வில்லனாக நடிக்குமாறு கேட்டார். ஆனால் நான் அப்போது தான் தளபதி-66 படத்திற்கான ஒப்பந்தத்தில் முன்பணம் வாங்கி அடுத்த 6 மாதங்களுக்கு கையெழுத்திட்டேன். நான் இயக்குனரிடம் ஓரிரு மாதங்கள் அவகாசம் கேட்டேன். ஆனால் அது இயலாது.அதற்கு அவர் நாம் எதிர்காலத்தில் இணைந்து பணி புரிவோம் என்று கூறினார் .நானும் நடிகர் அஜித்துடன் இனைந்து நடிப்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ:

நேரடியாக OTT-யில் வெளியாகும் ஸ்ருதிஹாசன் படம் ! டீஸர் வெளியீடு
சினிமா

நேரடியாக OTT-யில் வெளியாகும் ஸ்ருதிஹாசன் படம் ! டீஸர் வெளியீடு

துணிமடிக்க கற்றுத்தரும் கதிர்
சினிமா

துணிமடிக்க கற்றுத்தரும் கதிர்

asf asdfasdf asdfasdf asdf asdf def
சினிமா

asf asdfasdf asdfasdf asdf asdf def