தென்னிந்திய சினிமாவில் தன்னிகரற்ற மனிதராகவும் அட்டகாசமான நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். தமிழ் சினிமாவில் அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் பின் தொடர்ந்து ஆசை, வான்மதி, மைனர் மாப்பிள்ளை, காதல் கோட்டை,காதல் மன்னன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் இளைஞர்களின் மனதை கவர்ந்த நடிகராகவும் வளர்ந்து வந்தார். ஆரம்பத்தில் இருந்தே சாக்லேட் பாயாகவும் குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாகவும் வலம் வந்த அஜித் குமார், தீனா திரைப்படம் முதல் முழு கமர்ஷியல் ஹீரோவாகவும் ரசிகர்களின் ஆரவாரத்துடன் கொண்டாடப்படும் நட்சத்திரமாகவும் வளர்ந்தார். தொடர்ந்து பல பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்த அஜித் குமார் இடையே சில சறுக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் விடா முயற்சியினால் தனது 50 வது திரைப்படத்தை யாரும் எதிர்பார்க்காத கதைகளத்தில் வித்யாசமான கூட்டணியில் புது முயற்சியில் இறங்கினார் அஜித் குமார். அதன்படி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மங்காத்தா’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அஜித் திரைப்பயணத்தில் கொடுத்தது. இன்றும் ரசிகர்கள் மங்காத்தா திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். அதனை தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை படத்திற்கு படம் படைத்து வந்து தற்போது முன்னணி நடிகர்களில் மிக முக்கியமான நடிகராக அஜித் குமார் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் வெளியீட்டாக ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. பின் அஜித் குமாரின் 62 வது படமான AK62 படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா தயாரிக்க இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதனிடையே அஜித் குமார் தனது வாழ்நாள் கனவான அமைத்திக்கான உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செல்லுவதை கையில் எடுத்துள்ளார்.
இந்நிலையில் அஜித் அவர்களின் 52 வது பிறந்தநாள் நாளை மே 1 தேதி ரசிகர்கள் வெகுவிமர்சையாக களத்திலும் இணைய தளத்திலும் கொண்டாடவுள்ளனர். ஆண்டு தோறும் அஜித் குமாரின் பிறந்தநாள் பல பகுதிகளில் திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள். அதன்படியே இந்த ஆண்டும் அதற்கான திட்டங்கள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு அஜித் குமாரின் பிறந்தநாளை தொடர்ந்து அடுத்த சர்ப்ரைஸ் காத்திருக்கின்றது.
லைகா தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ள AK62 திரைப்படத்தின் தலைப்பு அல்லது அதற்கான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இது குறித்த தகவலும் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. ஆண்டு தோறும் அஜித் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடினாலும் இது போன்ற அப்டேட்டுகள் அஜித் ரசிகர்களுக்கு டபுள் டமாக்காவ அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ரசிகர்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டாடி வருகின்றனர்.