உழைப்பாளர் தினத்தில் மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட Special Treat... மாஸான அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

மாரி செல்வராஜின் மாமன்னன் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அறிவிப்பு,mari selvaraj in maamannan movie first look announcement | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இதனை அடுத்து தனது இரண்டாவது திரைப்படத்தில் தனுஷுடன் கைகோர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் கொரோனா காலகட்டத்தில் 50% இருக்கைகளோடு திரையரங்குகள் இயங்கிய சமயத்திலும் பெரும் வெற்றி பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்சமயம் நான்கு சிறுவர்களுடன் நடிகர் கலையரசன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள வாழை திரைப்படத்தை மாரி செல்வராஜ் உருவாக்கி வருகிறார். அடுத்ததாக அர்ஜுனா விருது பெற்ற இந்தியாவின் கபடி விளையாட்டு வீரர் மனத்தி.P.கணேசன் அவர்களின் பயோபிக் திரைப்படமாக உருவாகும் புதிய ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் திரைப்படம் மாமன்னன். முன்னதாக தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் - நடிகராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் சினிமா - அரசியல் என இரண்டிலும் நேர்த்தியாக பயணித்து வந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மொத்தமாக சினிமாவை விட்டு விலகி முழுநேர மக்கள் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பில் கடைசி திரைப்படமாக வெளிவர உள்ள திரைப்படம் தான் மாமன்னன் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் - வைகைப்புயல் வடிவேலு - ஃபகத் பாஸில் - கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வைகைப்புயல் வடிவேலு தனது திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவான மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் அட்டகாசமான புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் கோட் சூட் அணிந்தபடி உதயநிதி ஸ்டாலினும் வெள்ளை வேட்டி சட்டை அணிந்தபடி வைகைப்புயல் வடிவேலுவும் எதிரெதிரே நிற்கின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மாமன்னன் பட புதிய போஸ்டர் இதோ…
 

They’re coming. Save the date, #MAAMANNAN first look.

01.05.2023 🔥@Udhaystalin @mari_selvaraj @RedGiantMovies_ @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @teamaimpr pic.twitter.com/HiDQRxcxsL

— Red Giant Movies (@RedGiantMovies_) April 29, 2023

மணிரத்னம் சாருக்கு பாட்டு எழுதுவது ரொம்ப கஷ்டம்!- பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனின் பொன்னியின் செல்வன் 2 சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

மணிரத்னம் சாருக்கு பாட்டு எழுதுவது ரொம்ப கஷ்டம்!- பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனின் பொன்னியின் செல்வன் 2 சிறப்பு பேட்டி இதோ!

உருவாகிறது 'யாத்திசை' பாகம் 2.. இயக்குனர் கொடுத்த அட்டகாசமான அப்டேட் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

உருவாகிறது 'யாத்திசை' பாகம் 2.. இயக்குனர் கொடுத்த அட்டகாசமான அப்டேட் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

‘PRESSURE எல்லாம் ஒண்ணுமே இல்ல!’- பிக் பாஸ் அமீரின் முக்கியமான கேள்விக்கு சுவாரசியமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்! வீடியோ இதோ
சினிமா

‘PRESSURE எல்லாம் ஒண்ணுமே இல்ல!’- பிக் பாஸ் அமீரின் முக்கியமான கேள்விக்கு சுவாரசியமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்! வீடியோ இதோ