“அந்த பாடலில் இருப்பது பானையே இல்லை” உண்மையை உடைத்த தோட்டா தரணி – பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய அட்டகாசமான நேர்காணல் இதோ..

முதல்வன் பாடல் செட் உருவான விதம் குறித்து தோட்டா தரணி முழு வீடியோ இதோ - Thota tharani about Mudhalvan song set making | Galatta

கடந்த 1999ல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘முதல்வன்’ ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரகுவரன், மனிஷா கொய்ராலா, லைலா, வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை தென்னிந்தியாவில் பெற்றது. அட்டகாசமான அரசியல் கதைகளத்தை கொண்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இப்படம் இன்றும் ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படமாகவும் கொண்டாடும் திரைப்படமாகவும் இருந்து வருகிறது. பொதுவாகவே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் பிரம்மாண்ட சினிமாவை சார்ந்தே இருக்கும். சாதாரன கதையாக இருந்தாலும் பாடல்களிலாவது பிரம்மாண்டத்தை புகுத்திருப்பார் இயக்குனர் ஷங்கர். பாடல்களில் அவர் எடுத்து கொள்ளும் மெனக்கெடல் இன்றும் அந்த பாடலை புத்துணர்வாய் வைத்து வருகின்றது.    

இது தொடர்பாக இயக்குனர் ஷங்கர் அவர்களின் முதல்வன் படத்தில் கலை இயக்குனாராக பணியாற்றிய தோட்டா தரணி அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டார். அதில் முதல்வன் படத்தில் இடம் பெற்ற அழகான ராட்சசியே என்ற பாடலில் சிறப்பு தோற்றங்களை வைத்து படமாக்கம் செய்தது குறித்து தோட்டா தரணி பேசியது,

“இந்த பாடல் குறித்து சங்கர், சில விஷயங்கள் சொன்னார். தஞ்சாவூர் தலையாட்டு பொம்மை, சோள பொம்மை என்று நிறைய ஐடியா கொடுத்தார். நான் 40 வருஷம் முன்னாடி எங்க அப்பா கிட்ட ஒரு புத்தகம் பார்த்தேன். அதில் காய்கறிகள் வைத்து ஒரு ஆடை செய்திருப்பார்கள் அது நாடகத்திற்காக செய்திருப்பார்கள். அதை ஞாபகம் வைத்து கொண்டு நான் இதை செய்திருப்பேன். சூரிய காந்தி, கலம்காரி வரைபடம் என செய்தோம். அந்த நேரத்தில் நல்ல வேலையாட்கள் அமைந்தார்கள் அதனால் அதை என்னால் செய்ய முடிந்தது.” என்றார் தோட்டா தரணி. மேலும் தொடர்ந்து அதே பாடலில் பல ஆயிரம் பானைகளை கொண்டு ஒரு காட்சி உருவாகியிருக்கும் அந்த காட்சி குறித்து அவர் பேசுகையில்,

“தயிர் பானை போல் ஒரு ஆடை பண்ணோம். 3 வித்யாசமான அளவில் பானை வடிவில் ஆடை தயார் செய்தோம். அதுக்கப்புறம் பெரிய அளவில் அந்த பானை வடிவம் செய்தோம். அதே மாதிரி பானை தலையில் வைத்து கொண்டு ஓடும்போது மொத்த இடத்தையும் எப்படி இருக்க வேண்டும் என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்தேன்.

இது 8,000 கிட்ட இருந்து 10,000 பானை வந்திருக்கும். அதுக்கு சில பேர் இருந்தாங்க கொண்டு வரதுக்காக. ஆனால் கடைசியாக 100,200 பானைகள் தான் வந்தது.  முதலில் பானை அடுக்குவற்கான வடிவத்தை கொண்டு வர செய்தேன். இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்து குழந்தைகள் விளையாடும் பந்து ஏற்பாடு செய்தோம். 10,000 பந்து கொண்டு வந்து எல்லாத்தையும் கம்பி வெச்சு சுத்தி அதன் மீது நிறம் அடித்தோம். நிறைய பேருக்கு அந்த படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்களுக்கு அது பானை என்று தான் நினைத்தார்கள்.  8 அடிக்கு பிளாஸ்டிக் பந்து ஒவ்வொன்றும் பெரியது சிரியது என்று வரிசைப்படுத்தி வைத்தேன். என்னுடைய செட் எப்போதும் மலிவான விலையில் இருக்கும்.  அது எப்போதும் விலையுயர்ந்தாக இருக்காது. பார்க்கதான் பிரம்மாண்டமாக இருக்குமே தவிர அது எப்போதும் விலை மீறி போகாது. இதையெல்லாம் சங்கர் என்னிடம் வந்து 'சார் உங்க கட்டைவிரலை கொஞ்சமா எனக்கு கொடுத்துடுங்கசார்”. என்றார் கலை இயக்குனர் தோட்டா தரணி.

மேலும் தோட்டா தரணி கலை இயக்கத்தில் இன்று வெளியான பொன்னியின் செல்வன் படம் குறித்தும் மற்றும் அவரது திரைப்பயணம் குறித்தும் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..

“அந்த கண்ணாடி Shot இப்படிதான் எடுத்தோம்” உண்மையை உடைத்த தோட்டா தரணி – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“அந்த கண்ணாடி Shot இப்படிதான் எடுத்தோம்” உண்மையை உடைத்த தோட்டா தரணி – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

Mom to Wow...வெறித்தனமான உடற்பயிற்சி செய்து மாஸ் காட்டும் ஜோதிகா.. – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

Mom to Wow...வெறித்தனமான உடற்பயிற்சி செய்து மாஸ் காட்டும் ஜோதிகா.. – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..

“ஒரு மணி நேரத்தில் Sketch போட்டு கொடுத்தேன்..” பொன்னியின் செல்வன் கப்பல் உருவானவிதம் குறித்து தோட்டா தரணி – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“ஒரு மணி நேரத்தில் Sketch போட்டு கொடுத்தேன்..” பொன்னியின் செல்வன் கப்பல் உருவானவிதம் குறித்து தோட்டா தரணி – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..