AK62 - உலக சுற்றுப்பயணத்திற்கு முன்பு குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கும் அஜித்குமார்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கும் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்,ajith kumar shalini with their children new photos goes viral | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜித்குமார் இந்திய சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டு இருக்கிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள அஜித் குமாரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் சிவா உடன் இணைந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்த அஜித்குமார் அடுத்ததாக இயக்குனர் H.வினோத்துடன் இணைந்தார். சதுரங்க வேட்டை - தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் H.வினோத் முதல் முறை அஜித்குமார் அவர்களை வைத்து இயக்கிய திரைப்படம் மேற்கொண்ட பார்வை.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான பின்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக வலிமை திரைப்படத்தில் இந்த வெற்றி கூட்டணி இணைந்தது. பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக வெளிவந்த வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹட்ரிக் ஹிட் கொடுக்கும் வகையில் இணைந்த அஜித்குமார் - H.வினோத் கூட்டணியில் தயாரான துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அஜித் குமாருடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியர் முதல் முறை கதாநாயகியாக நடித்த துணிவு திரைப்படமும் பக்கா என்டர்டெய்னிங் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பற்றி மெகா ஹிட் ஆனது.

இதனை அடுத்து அஜித் குமாரின் திரைப்பயணத்தில் 62வது திரைப்படமாக தயாராகும், AK62 திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் அஜித்குமார் உடன் முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இணையும் AK62 திரைப்படத்திற்கு வேதாளம் மற்றும் விவேகம் ஆக்கிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து அனிருத் இசை அமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே சமீபத்தில் AK62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக அதிரடி ஆக்சன் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

முன்னதாக பைக் ரைடிங்கிலும் மிகுந்த ஆர்வத்தோடு தனது சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வரும் அஜித்குமார் அடுத்ததாக உலக சுற்றுப்பயணம் ஒன்றை தொடங்க இருக்கிறார். இந்த பைக் உலக சுற்றுப் பயணத்திற்கு “பரஸ்பர மரியாதை பயணம்” எனவும் பெயரிட்டுள்ளார். இந்நிலையில் தனது உலக சுற்றுப்பயணம் மற்றும் AK62 திரைப்படங்களுக்கு முன்பாக தனது குடும்பத்தோடு விடுமுறையை கழித்து வருகிறார் அஜித்குமார். அந்த வகையில் தனது குடும்பத்தோடு அஜித் குமார் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)

 

View this post on Instagram

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)

ராகவா லாரன்ஸின் மிரட்டலான ருத்ரன் பட அடுத்த சர்ப்ரைஸ் ரெடி… அதிரடியாக வந்த புதிய GLIMPSE இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸின் மிரட்டலான ருத்ரன் பட அடுத்த சர்ப்ரைஸ் ரெடி… அதிரடியாக வந்த புதிய GLIMPSE இதோ!

சினிமா

"கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர் விரைவில் வருகிறார்!"- தனுஷ் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக வந்த புது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இத

'வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது!'- தனது அடுத்த படம் குறித்து விக்னேஷ் சிவனின் அட்டகாசமான முதல் அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்
சினிமா

'வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது!'- தனது அடுத்த படம் குறித்து விக்னேஷ் சிவனின் அட்டகாசமான முதல் அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்