'யார் இந்த சர்க்கிள்?'- உச்சகட்ட கோபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன்... காரணம் இது தான்!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது,director vignesh shivan twitter account hacked | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். தனது முதல் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR உடன் கைகோர்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி திரைப்படம் பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த போடா போடி திரைப்படத்திற்கு பிறகு மூன்றாண்டு இடைவெளிக்கு பின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நானும் ரவுடிதான். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த நானும் ரவுடிதான் திரைப்படம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் ஆனது.

தொடர்ந்து தனது மூன்றாவது திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஸ்பெஷல் 26 படத்தின் தமிழ் ரீமேக்காக தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். பின்னர் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளிவந்த பாவக் கதைகள் எனும் ஆண்தாலாஜி படத்தில், இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் சுதா கங்கரா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் தலா ஒரு எபிசோடை இயக்க, இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது லவ் பண்ணா உட்ரனும் எனும் எபிசோடை இயக்கியிருந்தார். கடைசியாக மீண்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் கைகோர்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா - சமந்தா - விஜய் சேதுபதி மூவரும் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார்.

இந்த வரிசையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திரைப்பயணத்தில் அவரது ஆறாவது திரைப்படமாக தயாராகும் புதிய படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கும் AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு AK62 திரைப்படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கி இருப்பதாக தகவல்கள் வெளிவர ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ஆறாவது திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் கைகோர்ப்பதாகவும் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில் கோமாளி மற்றும் லவ் டுடே படங்களின் இயக்குனரும் நடிகருமான பிரதிப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளி வருகின்றன. முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 6வது திரைப்படத்திற்கு தயாராகுவதாகவும் குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸில் தனது ட்விட்டர் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டு, “யார் இந்த சர்க்கிள்? என்னுடைய ட்விட்டர் ஹாக் செய்யப்பட்டுள்ளது!!. யாரோ என்னுடைய ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துள்ளார். இது மிகவும் பயமுறுத்துவதாகவும் எரிச்சல் ஊட்டும் வகையிலும் இருக்கிறது” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். தொடர்ச்சியாக சமீப காலங்களில் பல திரை பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒரு சில தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் ட்விட்டர் கணக்கும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அந்த பதிவு இதோ…
ss rajamouli in rrr movie naatu naatu won the oscars for best original song

சினிமா

"கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர் விரைவில் வருகிறார்!"- தனுஷ் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக வந்த புது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இத

'வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது!'- தனது அடுத்த படம் குறித்து விக்னேஷ் சிவனின் அட்டகாசமான முதல் அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்
சினிமா

'வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது!'- தனது அடுத்த படம் குறித்து விக்னேஷ் சிவனின் அட்டகாசமான முதல் அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்

சினிமா

"தவறான அட்வைஸ்களால் தவறவிட்டேன்!"- வரலக்ஷ்மி சரத்குமார் கைவிட்ட படங்கள்... ஆச்சரியமூட்டும் பட்டியல் இதோ!