ராகவா லாரன்ஸின் மிரட்டலான ருத்ரன் பட அடுத்த சர்ப்ரைஸ் ரெடி… அதிரடியாக வந்த புதிய GLIMPSE இதோ!

ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட பகை முடி பாடல் புரோமோ வெளியீடு,raghava lawrence in rudhran movie pagai mudi song promo out now | Galatta

இந்திய சினிமாவின் நட்சத்திர இயக்குனராக பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸ் நடிகராகவும் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தனது ஹாரர் காமெடி சீரியஸாக முனி காஞ்சனா 1 காஞ்சனா 2 காஞ்சனா 3 என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தான் இயக்கி நடித்த வெளிவந்த காஞ்சனா 3 திரைப்படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த 2023 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து வரிசையாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் அசத்தலான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து பெரும் வெற்றி பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது  பாகத்தில் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் SJ.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இயக்குனர் P.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் ராகவா லாரன்ஸ் அடுத்து நடிக்கும் துர்கா திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. துர்கா படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு சகோதரர்கள் இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அன்பறிவு சகோதரர்கள் விலகியுள்ளதால் யார் இயக்குகிறார் என்பது குறித்த இதர அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் தயாரிப்பிலும் திரைக்கதையிலும், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்தில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வரிசையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகியுள்ள திரைப்படம் ருத்ரன். இயக்குனராக களமிறங்கி இருக்கும் FIVE STAR CREATIONS LLP நிறுவனத்தின் தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ருத்ரன் திரைப்படத்திற்கு RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ருத்ரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

முன்னதாக ருத்ரன் திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக வெளிவந்த பாடாத பாட்டெல்லாம் ரீமேக் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த பாடலாக பகை முடி எனும் பாடல் வருகிற மார்ச் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் மிரட்டலான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த பகை முடி ப்ரோமோ வீடியோ இதோ…
 

சினிமா

"தவறான அட்வைஸ்களால் தவறவிட்டேன்!"- வரலக்ஷ்மி சரத்குமார் கைவிட்ட படங்கள்... ஆச்சரியமூட்டும் பட்டியல் இதோ!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ARரஹ்மான் பகிர்ந்த ஸ்வீட்டான செய்தி! குவியும் வாழ்த்துகள்
சினிமா

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ARரஹ்மான் பகிர்ந்த ஸ்வீட்டான செய்தி! குவியும் வாழ்த்துகள்

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த இந்தியன் 2 பிரபலம்! வேற லெவல் அறிவிப்பு இதோ
சினிமா

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த இந்தியன் 2 பிரபலம்! வேற லெவல் அறிவிப்பு இதோ