புது கெட்டப்பில் அசத்தும் லெஜென்ட் சரவணன் .. ஒரு வேளை புது படமா இருக்குமோ? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

வைரலாகும் லெஜண்ட் சரவணன் புகைப்படங்கள் இதோ - Legend Saravan New Getup viral | Galatta

கடின உழைப்பினால் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வருபவர் லெஜண்ட் சரவணன். தனது நிறுவன விளம்பர படங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்ற லெஜெண்ட் சரவணன் பின் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படன் ‘தி லெஜண்ட்’. சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்' சார்பில் தயாரித்து நடித்த இப்படத்தை பிரபல இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கினார்.

மிகப்பெரிய பொருட்செலவில் அட்டகாசமான கதைகளத்தில் உருவான இப்படத்தில் லெஜன்ட் சரவணன் அவர்களுடன் இணைந்து கீர்த்திகா திவாரி மற்றும் ஊர்வசி ரௌட்டெல்லா, சுமன், மேலும் நாசர்  இளைய திலகம் பிரபு, விஜயகுமார், லதா, சச்சு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், தேவதர்ஷினி, மயில்சாமி, முனீஸ் காந்த், சிங்கம் புலி, லிவிங்ஸ்டண், மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, தீபா சங்கர், பெசன்ட் ரவிபோன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களம் இறங்கியது தி லெஜண்ட் திரைப்படம். மேலும் இப்படத்தில் குறிப்பாக மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஆரம்பத்தில் விமர்சனங்கள் எழுந்தாலும் பெருவாரியாக லெஜண்ட் சரவணன் அவர்களுக்கு வரவேற்பு வந்த வண்ணம் இருந்தது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 28 ல் வெளியான திலெஜண்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் & ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளிவந்த மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படம் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லெஜண்ட் சரவணன் அவர்கள் அவரது சமூக வலைதளத்தில் அட்டகாசமான புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன் ‘புது மாறுதல்.. விவரங்கள் விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார்.

rajinikanth fans welfare assistance program cancelled here is the official statement

New Transition…
Details Soon…#Legend #TheLegend #LegendSaravanan #NewEraStarts pic.twitter.com/PilzbEHQut

— Legend Saravanan (@yoursthelegend) March 13, 2023

தி லெஜண்ட் படத்திற்கு பின் சரவணன் நடிக்கவிருக்கும் புது படத்திற்கான கெட்டப்பாக இருக்க கூடும் என்று ரசிகர்களை தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தற்போது அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  நிச்சயம் வரும் காலங்களில் லெஜண்ட் சரவணன் அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கான அப்டேட்டை வழங்குவார் என்பதை எதிர்பார்க்கலாம்.

என்னது 5 மணி நேரமா?.. வெற்றிமாறனின் ‘வடசென்னை’ குறித்து சந்தோஷ் நாராயணன் -  சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..
சினிமா

என்னது 5 மணி நேரமா?.. வெற்றிமாறனின் ‘வடசென்னை’ குறித்து சந்தோஷ் நாராயணன் - சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

பங்கு சந்தையில் களம் இறங்கிய 'வெந்து தணிந்தது காடு' பட தயாரிப்பாளர்..  - வைரலாகும் அறிவிப்பு.. விவரம் இதோ..
சினிமா

பங்கு சந்தையில் களம் இறங்கிய 'வெந்து தணிந்தது காடு' பட தயாரிப்பாளர்.. - வைரலாகும் அறிவிப்பு.. விவரம் இதோ..

ஹாரிஸ் ஜெயராஜ் ட்விட்டர் கணக்கு முடங்கியது.. நடந்தது என்ன? – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

ஹாரிஸ் ஜெயராஜ் ட்விட்டர் கணக்கு முடங்கியது.. நடந்தது என்ன? – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..