விரைவில் ‘சூர்யா 42’ ப்ரோமோ! அட்டகாசமான அப்டேட்டை பகிர்ந்த பிரபலம்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் பதிவு இதோ..

சூர்யா 42 படத்தின் புரோமோ அப்டேட் விவரம் இதோ - Promo Update from Suriya 42 crew | Galatta

தமிழ் சினிமாவில் இருந்து அடுத்ததாக வெளியாகவிருக்கும் பெரிய திரைப்படம் ‘சூர்யா 42’. இயக்குனர் சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா வித்யாசமான போர்வீரன் தோற்றத்தில் நடிக்கின்றார். இந்த படத்தின் பூஜை கடந்த ஆண்டு நடைபெற்று பின் படத்திலிருந்து  மோஷன் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பத்தானி நடிக்கவிருகிறார். பிரபல பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீபிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

போர்களங்களுடன் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படம் 3D தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது சூர்யா 42  படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சிறந்த மேக்கப்காக தேசிய விருது பெற்ற ரஞ்சித் அம்பாடி அவர்கள் இப்படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அவர் அறிவிப்பின் படி, சூர்யா 42 படத்திற்கான புரோமோ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தோடு பதிவினை வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

A post shared by Ranjith Ambady (@ranjithambady)

சூர்யா 42 படத்திற்காக புரோமோ வீடியோ விக்ரம், லியோ படம் போல் வித்யாசமான முறையில் தலைப்பு வெளியிடும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு கடந்த வாரம் நடைபெற்றது என்ற தகவல் முன்னதாக வெளியானது. மேலும் விரைவில் சூர்யா 42 படத்தின் தலைப்பு அட்டகாசமான புரோமோ வீடியோவுடன் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

‘வணங்கான்’ படத்தை அதிரடியாக தொடங்கிய பாலா.. மிரட்டலான கெட்டப்பில் அருண் விஜய்.. - அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

‘வணங்கான்’ படத்தை அதிரடியாக தொடங்கிய பாலா.. மிரட்டலான கெட்டப்பில் அருண் விஜய்.. - அட்டகாசமான அப்டேட் இதோ..

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார்..  Fans Meet ல் கோவப்பட்ட சம்பவம் – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார்.. Fans Meet ல் கோவப்பட்ட சம்பவம் – வைரலாகும் வீடியோ இதோ..

விறுவிறுப்பான கட்டத்தில் தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங்… ட்ரெண்டாகும் சஞ்சய் தத்தின் அதிரடியான புது GLIMPSE இதோ!
சினிமா

விறுவிறுப்பான கட்டத்தில் தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங்… ட்ரெண்டாகும் சஞ்சய் தத்தின் அதிரடியான புது GLIMPSE இதோ!