தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாநாடு. நடிகர்கள் சிலம்பரசன்.T.R மற்றும்  S.J.சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று மெகா ஹிட்டானது.

இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் மன்மத லீலை (A Venkat Prabhu Quickie). நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கும் மன்மதலீலை திரைப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் மற்றும் சம்யுக்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.  முக்கிய வேடத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் நடித்துள்ளார்.

ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி இணைந்து வழங்கும் மன்மத லீலை படத்திற்கு தமிழ் அழகன் ஒளிப்பதிவில் வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். மன்மத லீலை படத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி மன்மதலீலை திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.  

இந்நிலையில்  மன்மதலீலை படத்திலிருந்து புதிய Sneak Peek வீடியோ தற்போது வெளியானது. ரொமான்டிக் காமெடி திரைப்படமாக தயாராகியிருக்கும் மன்மதலீலை திரைப்படத்தின் Sneak Peek வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…