கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து இவன் வேற மாதிரி , அரிமா நம்பி என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் விக்ரம் பிரபு. அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்கத்தில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார்.

பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு (2022) செப்டம்பர் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறனின் அசுரன், சூர்யாவின் ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகரான தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் டாணாக்காரன். வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள டாணாக்காரன் படத்தில் நடிகை அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்க லால், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

வருகிற ஏப்ரல் 8-ம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகும் டாணாக்காரன் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள டாணாக்காரன் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் டாணாக்காரன் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. விறுவிறுப்பான டாணாக்காரன் ட்ரைலர் இதோ…