"மீண்டும்.. மீண்டுமா?" தள்ளிப்போன சமந்தாவின் புதிய திரைப்படம்.. - ரசிகர்கள் ஏமாற்றம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..

மீண்டும் தள்ளி போகும் சாகுந்தலம் திரைப்படம் - Samantha Shaakuntalam movie postponed again | Galatta

தென்னிந்தியாவில் மிக முக்கிய நடிகைகளில் ஒருவர் சமந்தா. பல திரைப்படங்களை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து முக்கிய நடிகையாக கவனம் பெற்றவர் சமந்தா. மேலும் பாலிவுட்டில் பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் மூலம் இந்திய அளவு புகழ் பெற்றவர் சமந்தா. இந்திய சினிமாவில் மிகப் பிரபலமாக தற்போது வலம் வரும் சமந்தா.தனிப்பட்ட வாழ்கையில் சில பிரச்சனைகளை சந்தித்த சமந்தா பின் உடல்நலனிலும் பாதிக்கப்பட்டார். 'மயோசிடிஸ்' என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதற்கான சிகிச்சையில் முழுதாக ஈடுபட்டார்.  இதனால் சமந்தா நடிப்பில் வெளியாகவிருந்த திரைப்படங்கள் நடிக்கவிருந்த திரைப்படங்கள்  நிழுவையில் இருந்தது. இருந்தும் நிதானமாக படங்களில் நடித்தும் வெளியிட்டும் வருகிறார். அதன் படி கடந்த ஆண்டு சமந்தா நடிப்பில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியானது. மேலும் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ‘யசோதா’ திரைப்படம் வெளியானது. இந்த படங்களை தொடர்ந்து சமந்தா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ‘சாகுந்தாலம்’. மகாகவி காளிதாசர் எழுதிய புரானகதையான சாகுந்தலம்  என்ற கதையை அடிப்படையாக கொண்டு சரித்திர கதையாக படமாக்கபட்டுள்ள இந்த படத்தை ருத்ரமாதேவி திரைப்படத்தின் இயக்குனர் குணசேகர் எழுதி  இயக்கியுள்ளார். மேலும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் வெளயிடும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மணிஷர்மா இசையமைத்துள்ளார்.  முன்னதாக நவம்பரில் படத்தின்  வெளியீட்டு தேதியை அறிவித்திருந்த படக்குழு  முழுக்க முழுக்க 3D தொழிநுட்பத்தில் படத்தை  மாற்ற இருந்ததால் திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி 3D  தொழில்நுட்ப பணிகள் நிறைவடந்துள்ளதால் படத்தின் வெளியீட்டு தேதி வரும் பிப்ரவரி 17 ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி மிக மும்முரமாக படத்தின் விளம்பர வேலையில் இறங்கினார் சமந்தா மற்றும் படக்குழுவினர்.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி தற்போது தள்ளி போவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதில், “வரும் பிப்ரவரி 17 சாகுந்தலம் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகாது என்பதை வருத்தத்துடன் அன்பான ரசிகர்களுக்கு தெரிவிக்கின்றோம். புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளது.

The theatrical release of #Shaakuntalam stands postponed.

The new release date will be announced soon 🤍@Gunasekhar1 @Samanthaprabhu2 @ActorDevMohan @neelima_guna #ManiSharma @GunaaTeamworks @SVC_official @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/63GIFbK4CF

— Sri Venkateswara Creations (@SVC_official) February 7, 2023

இதனையடுத்து சமந்தாவை திரையில் பார்க்கும் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். தற்போது படக்குழுவினரின் இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருவது குறிபிடத்தக்கது. 

ஆட்டநாயகனின் Non Stop ஆட்டம்.. வாரிசு வசூல் அப்டேட் - தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்.. அதிகாரப் பூர்வ அப்டேட் இதோ..
சினிமா

ஆட்டநாயகனின் Non Stop ஆட்டம்.. வாரிசு வசூல் அப்டேட் - தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்.. அதிகாரப் பூர்வ அப்டேட் இதோ..

“அவ்ளோ easy அ கடுப்பேத்திட முடியுமா?” ஆர்.ஜே பாலாஜியின் எரிச்சலூட்டும் நேர்காணல் -  வைரலாகும் ‘ரன் பேபி ரன்’ Interview இதோ..
சினிமா

“அவ்ளோ easy அ கடுப்பேத்திட முடியுமா?” ஆர்.ஜே பாலாஜியின் எரிச்சலூட்டும் நேர்காணல் - வைரலாகும் ‘ரன் பேபி ரன்’ Interview இதோ..

திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பது குறித்து ஹன்சிகா.. தரமான பதில்.. -  சுவாரஸ்யமான வீடியோ இதோ..
சினிமா

திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பது குறித்து ஹன்சிகா.. தரமான பதில்.. - சுவாரஸ்யமான வீடியோ இதோ..