இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகரான நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படமாக தயாராகவுள்ள AK62 திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 

இதனிடையே இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு. அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, ஜான் கொக்கென், சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். 

ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது.  முன்னதாக ராக்ஸ்டார் அனிருத் குரலில் துணிவு படத்தின் முதல் பாடலாக வெளிவந்த சில்லா சில்லா பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில், இரண்டாவது பாடலாக நேற்று டிசம்பர் 18ஆம் தேதி வெளிவந்த காசேதான் கடவுளடா பாடலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான சிபி புவனச்சந்திரன் துணிவு படத்தின் காசேதான் கடவுளடா பாடல் படப்பிடிப்பின் போது அஜித் குமார் அவர் அணிந்திருந்த கண்ணாடியை தனக்கு பரிசாக வழங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த கண்ணாடியை அணிந்திருக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Ciby Bhuvana Chandran (@ciby.chandran)