தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி67 திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது.

இதனிடையே இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் வாரிசு படத்தில்  நடிக்கின்றனர். 

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. 

இதே சமயத்தில் ஆந்திராவில் சங்கராந்தி வெளியீடாக நந்தாமுரி பாலகிருஷ்ணாவின் வீரசிம்ம ரெட்டி திரைப்படமும் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அடுத்த படமாக இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கத்தில் தயாராகும் NBK108 திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Very Glad to be working with the incredibly versatile actor, dearest @realsarathkumar sir in #NBK108 😀

He is fit & fab as usual 🤗🤗 pic.twitter.com/Uhtl996lbu

— Anil Ravipudi (@AnilRavipudi) December 17, 2022