ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் அடுத்த ஆண்டு (2023) பொங்கலை மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனென்றால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித் குமாரின் துணிவு திரைப்படமும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

நேர்கொண்ட பார்வை & வலிமை திரைப்படங்களை தொடர்ந்து  3வது திரைப்படமாக அஜித் - H.வினோத் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் துணிவு துணிவு திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.  

அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  முன்னதாக துனிவு படத்திலிருந்து முதல் பாடலாக வெளிவந்த சில்லா சில்லா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று டிசம்பர் 18ஆம் தேதி இரண்டாவது பாடலாக காசேதான் கடவுளடா பாடல் வெளியானது.

சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் காசேதான் கடவுளடா பாடலில் நடிகை மஞ்சு வாரியரும் பாடியிருக்கிறார். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் பாடலில் மஞ்சுவாரியரின் குரல் இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் இதனை கேலி செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் பலவிதமான MEMEகளும் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இவற்றுக்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை மஞ்சு வாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில், “துணிவு படத்தின் காசேதான் கடவுளடா லிரிக் வீடியோ தற்போது வெளியாகிவிட்டது. எனது குரல் இல்லை என வருத்தப்படுபவர்கள் அனைவருக்கும் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். வருத்தப்பட வேண்டாம்.  வீடியோவிற்காக எனது குரல் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோவில் கட்டாயம் இடம் பெறும். என் மீது இருக்கும் உங்களது அக்கறைக்கு நன்றி.. உங்கள் அனைவரது கேலியையும் ரசித்தேன் அன்புடன் !! என மஞ்சு வாரியார் பதிவிட்டுள்ளார். மஞ்சுவாரியரின் அந்த பதிவு இதோ…
 

Lyrical video of Kasethan Kadavulada from #Thunivu is out. For those who are worried about not hearing my voice in it, don't worry, it was recorded for the video version. Thank you for your concern. Enjoyed the fun trolls!
Love 😊❤️https://t.co/9oqTiEYVzc

— Manju Warrier (@ManjuWarrier4) December 18, 2022