இந்த பொங்கல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது. காரணம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித் குமாரின் துணிவு ஆகிய திரைப்படங்கள் பொங்கல் வெளியீடாக (ஜனவரி 12)ஒரே நாளில் ரிலீஸாகின்றன. முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடியபல்லி இயக்கத்தின் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிக்க செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

இந்நிலையில் தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தேக பேட்டியில் வாரிசு திரைப்படத்தில் இணைந்தது குறித்தும் தளபதி விஜய் உடன் இணைந்து பணியாற்றியது குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் பேசும்போது, “நான் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய் அவர்கள் செல்போன் பயன்படுத்தி பார்த்ததே இல்லை. நான் செல்போன் வைத்திருப்பேன். ஆனால் நானும் மூன்று நான்கு நாட்களாக அவரை கவனித்து பார்த்தேன் அவர் செல்போன் எடுக்கவே இல்லை பின்னர் அவரிடம் கேட்டு விட்டேன். அதற்கு பதிலளித்த தளபதி, “காலையில் போன் பார்க்கிறேன்.. மதிய உணவு இடைவெளியின் போது போன் பார்க்கிறேன்.. பின்னர் மாலையில் பார்க்கிறேன் இடையில் எதற்கு போன் என அவர் சொன்னதும் நான் வாயடைத்து நின்றேன்.” என தெரிவித்தார்.

மேலும் செல்போனும் பயன்படுத்தாமல் படபிடிப்பு தளத்தில் விஜய் எப்படி இருப்பார் என கேட்டபோது, “ஷாட் இல்லாத சமயத்தில் மிகவும் கேஷுவலாக ஒரு சேரில் அமர்ந்திருப்பார். படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் கவனிப்பார். லைட் மேன் என்ன செய்கிறார் சுற்றி இருக்கும் நடிகர் நடிகைகள் எப்படி தயாராகிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் மற்ற பணிகள் எப்படி எல்லாம் நடக்கின்றன, என மிகுந்த விழிப்புணர்வோடு இருப்பார். அந்த மாதிரி போன் பயன்படுத்தாமல் இருப்பதால்தான் ஆக்‌ஷன் என்ன சொன்னதும் அவரிடமிருந்து அப்படி ஒரு எனர்ஜி வருகிறது. இதனை அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். பின்னர் அடுத்த நான்கு ஐந்து நாட்களுக்கு நான் செல்போன் பயன்படுத்தாமல் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது அந்த எனர்ஜியை என்னால் உணர முடிந்தது. இந்த ஒரு முக்கியமான விஷயத்தை தளபதி விஜய் அவர்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்” என பகிர்ந்து கொண்டார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட கணேஷ் வெங்கட்ராமனின் முழு பேட்டி இதோ…