வலிமை திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் முன்னதாக நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு.

அஜித் குமாருடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்கும் துணிவு திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்யும், துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கும் துணிவு திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் AK62 திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளார். லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தனது மனைவியும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவருமாக திகழ்ந்த நடிகை ஷாலினியின் பிறந்தநாளை நடிகர் அஜித்குமார் தனது மகன் மற்றும் மகளோடு இணைந்து நேற்று நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

#AjithKumar and #Shalini setting couple goals 💙🧡#Ajith #ShaliniAjith pic.twitter.com/KM2CrHa9VG

— Galatta Media (@galattadotcom) November 20, 2022

#AjithKumar and family celebrating #ShaliniAjith's birthday🎂🎈🎉🎊🥳🤩#Ajith #Shalini #Anoushka #Aadvik pic.twitter.com/Zf6rDYXW4Q

— Galatta Media (@galattadotcom) November 21, 2022