தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை ஆண்ட்ரியா படத்திற்கு படம் வித்தியாசமான கதைக் களங்களையும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் மாளிகை & நோ என்ட்ரி உள்ளிட்ட திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளன.

முன்னதாக இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சிபி சத்யராஜ் உடன் இணைந்து வட்டம், பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கத்தில் புதிய படம் மற்றும் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் மற்றொரு படம் என ஆண்ட்ரியா அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே ஆண்ட்ரியாவின் மற்றொரு த்ரில்லர் படமாக தயாராகியுள்ளது கா திரைப்படம். இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ள கா திரைப்படத்தை ஷாலோம் ஸ்டூடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ளார். ஆண்ட்ரியாவுடன் இணைந்து சலீம் கோஸ், மாரிமுத்து, கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிவழகன் ஒளிப்பதிவில், எலிஸா படத்தொகுப்பு செய்துள்ள கா திரைப்படத்திற்கு சுந்தர்.சி.பாபு இசையமைத்துள்ளார். இந்நிலையில் விரைவில் ரிலீசாக உள்ள கா திரைப்படத்தின் த்ரில்லிங்கான ட்ரைலர் தற்போது ரிலீஸானது. ஆண்ட்ரியாவின் கா பட ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.