வேகமெடுக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு - விரைவில் வித்யாசமான கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார்.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - Aishwaraya Rajinikanth at Lal Salaam Shooting Spot | Galatta

இந்திய சினிமாவின் மிகபெரிய திரையுலக ஆளுமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து பெற்றிருந்தாலும் தன்னிச்சையாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ‘3’ . நடிகர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் அனிருத் இசையில் வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. படத்தின் பாடல்கள் உலகளவில் அப்போதே டிரெண்ட் ஆனது. நடிகர் தனுஷ் அவர்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2006 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 திரைப்படத்தையடுத்து இயக்கிய திரைப்படம் ‘வை ராஜா வை கௌதம் கார்த்திக்  நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் வசூல் ரீதியாக திரைப்படம் வெற்றி பெற்றது. நடிகர் தனுஷ் சிறப்பு தோற்றம் இப்படத்தில் செய்திருப்பார். அதன்பின் அவர் சினிமா வீரன் என்ற ஆவண திரைப்படத்தை இயக்கியினார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பின்னணி குரல் கொடுத்திருப்பார். பின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது  நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கவிருக்கும் திரைப்படம் ‘லால் சலாம். லைகா நிறுவனம் தயாரிப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய பிரவின் பாஸ்கர் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

படத்தின் அறிவிப்பையடுத்து ரசிகர்கள் தனி எதிர்பார்ப்பை இப்படத்தின் மீது வைத்தனர். காரணம் ரஜினிகாந்த் வருகை படத்தில் இருப்பதால் முன்னதாக வை ராஜா வை படத்தின் தனுஷின் கதாபாத்திரம் ஆகசிறந்த காட்சியாகவும் ரசிகர்கள் கொண்டாடும் காட்சியாகவும் தமிழ் சினிமாவில் இருந்தது. அந்தவகையில் ரஜினியின் லால் சலாம் காட்சியும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப் பட்ட புகைப்படங்களை பதிவிட்டு அதனுடன் “வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோவிலில் படப்பிடிப்பு தொடங்கியது. இது தற்செயல் என்று சொல்லலாம் அல்லது சில நேரம் நான் நம்பும் கடவுள் அதன் பிள்ளையுடன் மறைமுகமாக பேச முயற்சிக்கும் அழகான இனிமையான தருணமாகவும் கருதலாம்” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவு இணையத்தில் வைரலாகி  வருகிறது. 

 

Happens to be a Friday ..early start and shooting in an age old Amman temple …can call it coincidence or sometimes I believe god has her own sweet small ways of communicating with her child😇🌸🙏🏼#blessingsindisguise #lovemyjob pic.twitter.com/xxqHF9RgtN

— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 17, 2023

 

அனிருத், ஏஆர் ரகுமானுக்கு போட்டியாக களமிறங்கிய பிரபல இசையமைப்பாளர் - 25 படங்களுடன் வைரலாகும் அட்டகாசமான Line up.. விவரம் இதோ..
சினிமா

அனிருத், ஏஆர் ரகுமானுக்கு போட்டியாக களமிறங்கிய பிரபல இசையமைப்பாளர் - 25 படங்களுடன் வைரலாகும் அட்டகாசமான Line up.. விவரம் இதோ..

ரஜினிகாந்தின் ‘எஜமான்’ படத்திற்கு ரசிகை எழுதிய கடிதம்.. - ஏவிஎம் நிறுவனம் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

ரஜினிகாந்தின் ‘எஜமான்’ படத்திற்கு ரசிகை எழுதிய கடிதம்.. - ஏவிஎம் நிறுவனம் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. வைரலாகும் பதிவு இதோ..

‘நாட்டு நாட்டு?’.. ‘நாக்குமுக்க?’.. ரசிகர்களின் ஆதங்கத்தை பகிர்ந்த நடிகர் நகுல்.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

‘நாட்டு நாட்டு?’.. ‘நாக்குமுக்க?’.. ரசிகர்களின் ஆதங்கத்தை பகிர்ந்த நடிகர் நகுல்.. – வைரலாகும் பதிவு இதோ..