கடின உழைப்பால் உயர்ந்த KPYதீனா பகிர்ந்த ஸ்வீட்டான செய்தி... குவியும் வாழ்த்துக்கள்!

தனது கடின உழைப்பால் புது வீடு கட்டிய KPYதீனா,kpy dheena built his own house in his native vijay tv | Galatta

தமிழ்நாட்டு சின்னத்திரை ரசிகர்களுக்கு ஃபேவரட்டான சேனல்களில் ஒன்று விஜய் டிவி. நகைச்சுவை நடிகர் சந்தானம் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் இன்றியமையாத கதாநாயகர்களின் ஒருவராக திகழும் சிவகார்த்திகேயன் உட்பட பல நட்சத்திரங்கள் விஜய் டிவியில் இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் மிகவும் முக்கியமானவர் KPYதீனா. விஜய் தொலைக்காட்சியின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிக பிரபலமடைந்த தீனாவின் டைமிங் காமெடிகள் ரசிகர்களின் மனதை வென்றன.

தொடர்ந்து விஜய் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளின் வாயிலாக தனக்கே உரித்தான நகைச்சுவையான பேச்சால் மக்களை மகிழ்வித்து வந்த தீனா பின்னர் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கினார். நடிகர் தனுஷ் முதல் முறை இயக்கி நடித்த பவர் பாண்டி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து நடிகராக அறிமுகமான தீனா தொடர்ந்து குற்றம் செய்யல், தும்பா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கைதி திரைப்படத்தில் அசத்தலான கதாபாத்திரத்தில் நடித்த தீனா நடிகராகவும் முத்திரை பதித்தார்.

தொடர்ந்து மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்த தீனா, தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த புலிக்குத்தி பாண்டி, ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளிவந்த அன்பறிவு, சமீபத்தில் ஆஹா தமிழ் தளத்தில் வெளிவந்த உடன்பால் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அடுத்ததாக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ள டீசல் திரைப்படத்தில் தினா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடிகர் தீனா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மகிழ்ச்சியான செய்தி சோசியல் மீடியாவில் பலரது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கடின உழைப்பால் திறமையால் படிப்படியாக உயர்ந்து வரும் நடிகர் தீனா தனது சொந்த ஊரில் தனக்கான சொந்த வீட்டை கட்டியுள்ளார். இந்த புதிய வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீனா வெளியிட்டுள்ளார். மேலும் "வீடு சுவர்களாலும் தூண்களாலும் கட்டப்படுகிறது" "குடும்பம் அன்பாலும் கனவுகளாலும் கட்டப்படுகிறது." "சொந்த ஊரில் கனவு வீடு" எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். எனவே ரசிகர்களும் பிரபலங்களும் தீனாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கலாட்டா குழுமம் நடிகர் தீனா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. நடிகர் தீனாவின் அந்த பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Dinesh M (@dheena_offl)

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் பக்கா மாஸ் என்டர்டெய்னர் கேரன்டி!'- அதிரடியான கஸ்டடி பட ஆக்ஷன் ப்ளாக் டீசர் இதோ!
சினிமா

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் பக்கா மாஸ் என்டர்டெய்னர் கேரன்டி!'- அதிரடியான கஸ்டடி பட ஆக்ஷன் ப்ளாக் டீசர் இதோ!

தளபதி விஜய்- லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் இணைந்த மாநகரம் பட நடிகர்... ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!
சினிமா

தளபதி விஜய்- லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் இணைந்த மாநகரம் பட நடிகர்... ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!

சீயான் விக்ரமின் அதிரடியான துருவ நட்சத்திரம் பட ரிலீஸ் எப்போது தெரியுமா?- வேற லெவல் அப்டேட் கொடுத்த ஹாலிவுட் நடிகர்!
சினிமா

சீயான் விக்ரமின் அதிரடியான துருவ நட்சத்திரம் பட ரிலீஸ் எப்போது தெரியுமா?- வேற லெவல் அப்டேட் கொடுத்த ஹாலிவுட் நடிகர்!