"நண்பா இவன் தான் அந்த பிக்கிலி!"- விஜய் ஆண்டனியின் அதிரடியான பிச்சைக்காரன் 2 பட அட்டகாசமான சர்ப்ரைஸ் குறித்த அறிவிப்பு இதோ!

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட புது சர்ப்ரைஸ் அறிவிப்பு,he is bikili vijay antony in pichaikaran2 movie new announcement | Galatta

தனக்கே உரித்தான ஸ்டைலில் ரசிகர்களை கொண்டாட வைக்கும் அட்டகாசமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து நடிகராகவும் அசத்தி வருகிறார். “நான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கிய விஜய் ஆண்டனி அடுத்தடுத்து “சலீம்”, “இந்தியா பாகிஸ்தான்”, “பிச்சைக்காரன்”, “சைத்தான்”, “எமன்”, “காளி”, “திமிரு புடிச்சவன்”, “கொலைகாரன்” என விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. கடைசியாக விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த “கோடியில் ஒருவன்” திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. 

தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக பல திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. அந்த வகையில், இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன், இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்துள்ள காக்கி, மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே நிறைவடைந்து நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.

மேலும் இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கத்தில் திரில்லர் படமாக தயாராகியுள்ள கொலை, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன், தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் அதிரடியான பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள ரத்தம் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் வள்ளி மயில் ஆகிய திரைப்படங்களும் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் தனது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து காவியா தப்பர் கதாநாயகியாக நடிக்க, ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, YG.மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே படத்தொகுப்பும் செய்து இசையமைக்கிறார். இந்தக் கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக பிச்சைக்காரன் 2 அறிவிப்பு வெளியான சமயத்தில் இருந்து ஆன்டி பிக்கிலி என்ற வார்த்தையும் படக்குழுவினர் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் விஜய் ஆண்டனி அவர்கள் “நான் தான் ஆன்டி பிக்கிலி” என தெரிவித்தார். அப்படி என்றால் அந்த பிக்கிலி யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில், "நண்பா இவன் தான் பிக்கிலி!" என விஜய் ஆண்டனி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், "கொஞ்சம் கவலைப்படுங்க முடிஞ்சா பயப்படுங்க இவன பத்தி நாளைக்கு மாலை 4 மணிக்கு பிக்கிலி பாட்டில் இன்னும் நிறைய சொல்றேன்." என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். நாளை மாலை 4 மணிக்கு பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் அடுத்த பாடலாக பிக்கிலி பாடல் வெளிவர உள்ளது. அந்தப் பதிவு இதோ…

 

நண்பா...
இவன்தான் #பிக்கிலி💀
கொஞ்சம் கவலப்படுங்க🥲
முடிஞ்சா பயப்புடுங்க 👺

இவனப்பத்தி, நாளைக்கி evening 4 மணிக்கி, #BIKILI song-ல இன்னும் நிறைய சொல்றேன்🤔#Pichaikkaran2 pic.twitter.com/DH48S6tcAV

— vijayantony (@vijayantony) March 16, 2023

தளபதி விஜய்- லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் இணைந்த மாநகரம் பட நடிகர்... ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!
சினிமா

தளபதி விஜய்- லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் இணைந்த மாநகரம் பட நடிகர்... ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!

சீயான் விக்ரமின் அதிரடியான துருவ நட்சத்திரம் பட ரிலீஸ் எப்போது தெரியுமா?- வேற லெவல் அப்டேட் கொடுத்த ஹாலிவுட் நடிகர்!
சினிமா

சீயான் விக்ரமின் அதிரடியான துருவ நட்சத்திரம் பட ரிலீஸ் எப்போது தெரியுமா?- வேற லெவல் அப்டேட் கொடுத்த ஹாலிவுட் நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட மாஸான பாடல்... இதுவரை வெளிவராத சர்ப்ரைஸ் குறித்து மனம் திறந்த சந்தோஷ் நாராயணன்! வீடியோ உள்ளே
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட மாஸான பாடல்... இதுவரை வெளிவராத சர்ப்ரைஸ் குறித்து மனம் திறந்த சந்தோஷ் நாராயணன்! வீடியோ உள்ளே