‘நாட்டு நாட்டு?’.. ‘நாக்குமுக்க?’.. ரசிகர்களின் ஆதங்கத்தை பகிர்ந்த நடிகர் நகுல்.. – வைரலாகும் பதிவு இதோ..

நடிகர் நகுல் பகிர்ந்த ரசிகரின் பதிவு வைரல் - Actor nakkul reacts fans meme | Galatta

சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த பாடல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்  திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் விருதினை தட்டி சென்றது. விருதினை இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த விருது இந்திய ரசிகர்களை பெருமையடைய செய்தது. மேலும் ஆர் ஆர் ஆர் பட ரசிகர்கள் இதனை இன்னமும் கொண்டாடி வருகின்றானர். உலகின் தலை சிறந்த விருது என்று கலைஞர்களால் அங்கீகரிக்கப் பட்ட ஆஸ்கார் விருதினை நாட்டு நாட்டு பாடல் வென்றது ஒரு புறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் அதே நேரத்தில் சில தரப்பினரிடமிருந்து விமர்சனமும் எழுந்தது.

நாட்டு நாட்டு பாடலை விட அந்த படத்தில் சிறந்த பாடல்கள் உள்ளது. எப்படி இந்த விருது அந்த பாடலுக்கு சென்றடைந்தது என்ற விமர்சனமும்,நாட்டு நாட்டு பாடலை விட வேறு எவ்வளவோ பாடல்கள் இதுவரை வந்துள்ளது அதற்கெல்லாம் ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்றெல்லாம் தனது ஆதங்கத்தை கருத்துக்களாகவும் விமர்சனங்களாகவும் இணையத்தில் வைத்து வருகின்றனார்.

இந்நிலையில் ரசிகர்கள் சிலர் 2008 ல் நகுல், சுனைனா நடிப்பில் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாக்குமுக்க’ பாடலை கேட்டிருந்தால் அதற்கும் ஆஸ்கார் விருது வழங்கியிருப்பார் என்று கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.

இதனையடுத்து நடிகர் நகுல் அந்த பதிவை பகிர்ந்து, “ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்றதில் அளவுகடந்த பெருமை கொள்கிறேன்.. நாக்கு மூக்க பாடல் குறித்த இது போன்ற பதிவுகள் என் கண்ணில் படும்போது என் முகத்தில் புன்னகை தோன்றுகிறது. மகிழ்கின்றேன்.” என்று பதிவு செய்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் நடிகர் நகுல் பதிவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.   

Extremely proud of Team #RRR #NattuNattu winning the #Oscars 🌺💐 Hats Off!!!
But also finding something like this online brings a smile to the face, Grateful 💕#manifesting @vijayantony @vijaymilton 🙏🏼🙏🏼🙏🏼 pic.twitter.com/KXb3cQ1xfY

— Nakkhul (@Nakkhul_Jaidev) March 15, 2023

காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையில் வெளியான நாக்கு முக்க பாடல் அன்று மிகப்பெரிய வரவேற்பை பெற்று பட்டிதொட்டியெல்லாம் குத்தாட்டம் போட வைத்தது. அன்று ரசிகர்களின் ஆராவரத்துடன் அந்த பாடலுக்காகவே தனி கூட்டம் திரையரங்குகளுக்கு வந்த வண்ணம் இருந்தது. திரைப்படம் ஹிட் அடிக்க அந்த பாடலும் மிகப்பெரிய காரணமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது.

‘ஆர் ஆர் ஆர்’ படக்குழுவினரை பாராட்டிய உலக புகழ் பெற்ற இசைக்கலைஞர் – நெகிழ்ச்சியில் எம் எம் கீரவாணி.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

‘ஆர் ஆர் ஆர்’ படக்குழுவினரை பாராட்டிய உலக புகழ் பெற்ற இசைக்கலைஞர் – நெகிழ்ச்சியில் எம் எம் கீரவாணி.. வைரலாகும் பதிவு இதோ..

வெறித்தனமான காட்சிகளுடன் வெளியானது ‘தசரா’ டிரைலர் .. -  மிரட்டலான தோற்றத்தில் நானி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
சினிமா

வெறித்தனமான காட்சிகளுடன் வெளியானது ‘தசரா’ டிரைலர் .. - மிரட்டலான தோற்றத்தில் நானி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

சினிமா

"இது இந்திய சினிமாவையே மாற்றும்.." மாரி செல்வராஜின் 'வாழை' படம் குறித்து சந்தோஷ் நாராயணன்.. - சுவாரஸ்மான வீடியோ இதோ..