ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த சுவாரஸ்யமான படம்... கவனத்தை ஈர்க்கும் ஃபர்ஹானா பட டீசர் இதோ!

ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா பட டீசர் வெளியீடு,aishwarya rajesh in farhana movie teaser out now | Galatta

தென்னிந்தியா சினிமாவின் இன்றியமையாத கதாநாயகிகளில் ஒருவராக தமிழ் தெலுங்கு மலையாளம் என அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த 2023ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். அந்த வகையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படமும், பிரபல மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணா இயக்கத்தில் RJ.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த திரில்லர் திரைப்படமான ரன் பேபி ரன் திரைப்படமும் கடந்த 3ம் தேதி ஒரே நாளில் ரிலீஸாகி மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக வெளிவந்த ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி திரைப்படமும் கவனத்தை ஈர்த்தது

தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து நடித்த துருவ நட்சத்திரம், விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள மோகன்தாஸ், ஆக்சன் கிங் அர்ஜுனன் உடன் இணைந்து நடித்துள்ள தீயவர் குலைகள் நடுங்க, உள்ளிட்ட திரைப்படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி இருக்கின்றன. தொடர்ந்து மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து அஜயன்டே ரண்டாம் மோஷனம் படத்தில் நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து, பார்வதி, ஊர்வசி, ரம்யா நம்பீசன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோருடன் இணைந்து HER எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார். மேலும் நடிகர் ஜோஜு ஜார்ஜ் உடன் இணைந்து புலிமடா எனும் திரைப்படத்திலும் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாது தற்போது ஹிந்தியிலும் காலடி எடுத்து வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், மாணிக் எனும் ஹிந்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். 

இந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்த சுவாரஸ்யமான படமாக தயாராகியுள்ள படம் ஃபர்ஹானா. ஒரு நாள் கூத்து , மான்ஸ்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஃபர்ஹானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஃபர்ஹானா திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவில், VJ சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் ஃபர்ஹானா திரைப்படத்தின் டீசர் சற்று முன்பு வெளியாகி உள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விறுவிறுப்பான அந்த டீசர் இதோ…
 

தளபதி விஜயின் லியோ பட அடுத்த மாஸ் அப்டேட் LOADING… ரசிகர்களை உற்சாகப்படுத்திய முக்கிய தொழில்நுட்ப கலைஞரின் ட்வீட்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி விஜயின் லியோ பட அடுத்த மாஸ் அப்டேட் LOADING… ரசிகர்களை உற்சாகப்படுத்திய முக்கிய தொழில்நுட்ப கலைஞரின் ட்வீட்! விவரம் உள்ளே

நான் கார் துடைக்கிற பையன் தானே... வாழ்க்கையை மாற்றிய ஐஸ்கிரீம் பற்றி பேசிய ராகவா லாரன்ஸின் பக்கா மாஸ் வீடியோ இதோ!
சினிமா

நான் கார் துடைக்கிற பையன் தானே... வாழ்க்கையை மாற்றிய ஐஸ்கிரீம் பற்றி பேசிய ராகவா லாரன்ஸின் பக்கா மாஸ் வீடியோ இதோ!

சத்துணவு சாப்பாட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்ற ராகவா லாரன்ஸ்... பசியின் வலி குறித்து பேசிய எமோஷனலான வீடியோ இதோ!
சினிமா

சத்துணவு சாப்பாட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்ற ராகவா லாரன்ஸ்... பசியின் வலி குறித்து பேசிய எமோஷனலான வீடியோ இதோ!