நான் கார் துடைக்கிற பையன் தானே... வாழ்க்கையை மாற்றிய ஐஸ்கிரீம் பற்றி பேசிய ராகவா லாரன்ஸின் பக்கா மாஸ் வீடியோ இதோ!

வாழ்க்கையை மாற்றிய ஐஸ்கிரீம் பற்றி பேசிய ராகவா லாரன்ஸ்,raghava lawrence inspirational story about ice cream | Galatta

தனது ஆரம்பக் கட்டத்தில் முன்னணி ஸ்டண்ட் இயக்குனரான சூப்பர் சூப்பராயன் அவர்களின் கார் துடைக்கும் பையனாக வேலைக்கு சேர்ந்து, பின்னர் கூட்டத்தில் ஒரு நடன கலைஞராக நடனமாடி, பின்னர் மக்கள் விரும்பும் நடன கலைஞராக வளர்ந்து, நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என உயர்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவின் இன்றியமையாத பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழ்கிறார் ராகவா லாரன்ஸ். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2 மற்றும் அதிகாரம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ் அவர்கள் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இளமையில் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட தன்னுடைய கடினமான காலகட்டம் குறித்து ராகவா லாரன்ஸ் மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில் தனது வாழ்க்கையை மாற்றிய இரண்டு முக்கியமான தருணங்கள் குறித்து பேசினார். அதில் முதலாவதாக, தனது பள்ளி பருவத்தில் வீட்டில் இருந்த ஏழ்மையின் காரணமாக பசியின் வலியை குறைக்க தனது பள்ளியில் இருந்து சத்துணவு சாப்பாட்டை வீட்டுக்கு எடுத்துச் சென்ற நிகழ்வு குறித்து எமோஷனலாக பகிர்ந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாக, 

“ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்து இருக்கும் போது சண்டை கலைஞர்கள் அனைவருக்கும் ஐஸ்க்ரீம் கொடுத்து கொண்டு வந்தார்கள்.  ஒரு ஃபைட்டர் அண்ணா வாங்கிக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்து கொண்டிருக்கிறார். எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசை… கடைசியில் வரும் போது எல்லோருக்கும் ஒரு ஒரு பாக்ஸ் அந்த மாதிரி கொடுத்தார்கள். எனக்கு மட்டும் ஒரு ஸ்பூனில் எடுத்து கொடுத்தார்கள். அவர்கள் எல்லோரும் ஃபைட்டர்கள் சாப்பிடுகிறார்கள். ஆனால் நான் சூப்பர் சூப்பராயன் மாஸ்டரின் கார் துடைக்கிற பையன்... மற்றவர்கள் சாப்பிடுவதை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன் அந்த ஐஸ்கிரீம் என்பது எனது மனதில் அப்படியே நின்று விட்டது. அதனால் இப்போது நான் என்னுடைய தயாரிப்பில் எப்போதெல்லாம்  படங்கள் பண்ணுகிறேனோ காஞ்சனா படங்கள் எல்லாம் செய்யும் போது சரியாக 11:00 மணிக்கு படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் மொத்த யூனிட்டுக்கும் ஐஸ்கிரீம் வந்துவிடும். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படியே மேலே அமர்ந்து பார்ப்பேன். நான் தானே தயாரிப்பாளர் இப்போது அப்படியே மேலே இருந்து பார்ப்பேன். எல்லோரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்கள் எனக்கு கிடைக்கவில்லை அல்லவா இந்த ஐஸ்கிரீம்… எல்லோரும் சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள் என்பேன். கஷ்டப்படும்போது எனக்கு யாரும் கொடுக்கவில்லை அல்லவா கஷ்டப்படுகிறவன் எல்லோரும் ஐஸ்கிரீம் சாப்பிடுங்கள். அந்த சமயத்தில் என் சாப்பாட்டை தட்டி விட்ட அண்ணன் மீதும் ஐஸ்கிரீமை கொடுக்காத அண்ணன் மீதும் கோபம் இருந்தது. ஆனால் அவர்கள் அதை செய்யாமல் இருந்திருந்தால் நான் இப்போது இங்கே இருந்திருக்க மாட்டேன்.” என ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்டார். ராகவா லாரன்ஸின் அந்த முழு பேட்டி இதோ…
 

ராகவா லாரன்ஸின் மிரட்டலான நடனத்தில் ருத்ரன் பட புது ட்ரீட்... ட்ரெண்டாகும் ஜொர்த்தால வீடியோ பாடல் இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸின் மிரட்டலான நடனத்தில் ருத்ரன் பட புது ட்ரீட்... ட்ரெண்டாகும் ஜொர்த்தால வீடியோ பாடல் இதோ!

'ரோலக்ஸ் சார் எங்கே?'- வந்தியத்தேவனில் இருந்து டில்லியாக மாறிய கார்த்தி... பொன்னியின் செல்வன் 2 விழாவில் சூர்யாவின் கங்குவா பட அதிரடி அப்டேட்!
சினிமா

'ரோலக்ஸ் சார் எங்கே?'- வந்தியத்தேவனில் இருந்து டில்லியாக மாறிய கார்த்தி... பொன்னியின் செல்வன் 2 விழாவில் சூர்யாவின் கங்குவா பட அதிரடி அப்டேட்!

சினிமா

"பேசுவதற்கு நிறைய இருக்கிறது!"- பொன்னியின் செல்வன் 2 மேடையில் த்ரிஷா கொடுத்த லியோ பட மாஸ் அப்டேட்! விவரம் இதோ