பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 பட முன்னோட்டமாக வந்த புது டீசர்... உலகநாயகன் கமல்ஹாசன் குரலில் அட்டகாசமான வீடியோ இதோ!

பொன்னியின் செல்வன் 2 பட முன்னோட்ட வீடியோ வெளியானது,ponniyin selvan 2 movie new video of aishwarya rai as nandhini | Galatta

புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்க தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் முயற்சி செய்து கைவிட்ட பொன்னியின் செல்வன் நாவலை பலமுறை முயற்சி செய்த இயக்குனர் மணிரத்னம் விடாமுயற்சியின் பலனாக தனது கடின உழைப்பால் திரை வடிவமாக்கினார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படம் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத இமாலய வெற்றியாக 500 கோடி ரூபாய்க்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனத்தில் பணியாற்றியுள்ளனர்.   

இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே ஒன்றிணைந்த இரண்டு பாகங்கள் கொண்ட படமாக வெளிவந்த பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் அற்புதமான ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் இன்னும் மெருகேற்றினார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது.  இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் முன்னோட்டமாக உலகநாயகன் கமல்ஹாசனின் குரலில் அட்டகாசமான புதிய டீசர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த டீசர் இதோ…
 

சத்துணவு சாப்பாட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்ற ராகவா லாரன்ஸ்... பசியின் வலி குறித்து பேசிய எமோஷனலான வீடியோ இதோ!
சினிமா

சத்துணவு சாப்பாட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்ற ராகவா லாரன்ஸ்... பசியின் வலி குறித்து பேசிய எமோஷனலான வீடியோ இதோ!

இவங்க WEDDINGல நிறைய பேர் பேசாத விஷயம் என்னன்னா?- விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் செயல் குறித்து பேசிய பிரபலம்! விவரம் உள்ளே
சினிமா

இவங்க WEDDINGல நிறைய பேர் பேசாத விஷயம் என்னன்னா?- விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் செயல் குறித்து பேசிய பிரபலம்! விவரம் உள்ளே

ராகவா லாரன்ஸின் மிரட்டலான நடனத்தில் ருத்ரன் பட புது ட்ரீட்... ட்ரெண்டாகும் ஜொர்த்தால வீடியோ பாடல் இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸின் மிரட்டலான நடனத்தில் ருத்ரன் பட புது ட்ரீட்... ட்ரெண்டாகும் ஜொர்த்தால வீடியோ பாடல் இதோ!