சத்துணவு சாப்பாட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்ற ராகவா லாரன்ஸ்... பசியின் வலி குறித்து பேசிய எமோஷனலான வீடியோ இதோ!

தனது கடினமான ஆரம்ப காலகட்டம் குறித்து பேசிய ராகவா லாரன்ஸ்,raghava lawrence about his painful starting phase | Galatta

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த அதிரடி ஆக்சன் படமான ருத்ரன் திரைப்படம் சமீபத்தில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி வெற்றி நடை போடுகிறது. அடுத்தடுத்து சந்திரமுகி 2 ஜிகர்தண்டா 2 ஆகிய திரைப்படங்கள் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ் அவர்கள் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இளமையில் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட தன்னுடைய கடினமான காலகட்டம் குறித்து ராகவா லாரன்ஸ் மனம் திறந்து பேசினார். 

அப்படி பேசுகையில், “சாப்பாட்டிற்காக இரண்டு விஷயம் இப்போது 60 குழந்தைகளை எனது வீட்டில் வைத்து சாப்பாடு போடுகிறேன் என்றால் அதற்கு காரணம் என் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்கள் தான். பள்ளியில் அமர்ந்திருக்கிறேன். வீட்டில் ரொம்ப பசி. சாப்பிட்டு ஒன்றரை நாள் ஆகிறது. ரொம்ப ரொம்ப பசியில் இருக்கிறார்கள். அப்போது அங்கு வந்து என்ன கேட்பார்கள் என்றால் சத்துணவு திட்டத்திற்கு டபரா டபராவாக வைத்திருப்பார்கள் அதற்கு தண்ணீர் அடிப்பதற்கு யாராவது வருகிறீர்களா என கேட்பார்கள் அப்போது கை தூக்கினால், அப்படி போய் தண்ணீர் அடித்துக் கொடுத்தால் நமக்கு ஐந்து கரண்டி சேர்த்து போடுவார்கள். உட்கார்ந்து கொண்டிருப்போம் வந்து கேட்பார்கள் எல்லார் முன்பும் கை தூக்குவதற்கு கொஞ்சம் அசிங்கமாக தான் இருக்கும். ஆனால் கை தூக்குவேன். நம்மோடு இன்னொருவர் கஷ்டப்படுபவர் கம்பெனிக்கு வருவார் அல்லவா அப்படி ஒருவரும் வருவார். போய் தண்ணீர் அடித்துக் கொடுத்தால் ஐந்து கரண்டி சாப்பாடு சேர்த்து கொடுப்பார்கள். அதை வாங்கிக்கொண்டு அப்படியே ரோட்டில் வந்தால் எல்லோரும் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் ஒரு அலுமினிய பெட்டி இருக்கும். புத்தகங்களை எல்லாம் எடுத்து கையில் வைத்துக்கொண்டு அந்த பெட்டிக்குள் சாப்பாடு வைத்து நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது ஊரில் என்னோடு கால் பந்து விளையாடக்கூடிய ஒரு அண்ணா இருக்கிறார். அந்த சமயத்தில் அவர் கொஞ்சம் குடித்திருந்தார். நேராக என்னிடம் வந்து டேய் லாரன்ஸ் என்னடா பெட்டிய தலையில வச்சுட்டு போய்கிட்டு இருக்க என்றார் நான் சாப்பாடு எடுத்துக் கொண்டு போகிறேன் என அவரிடம் சொல்ல முடியாது. இல்ல அண்ணே வெயில் அடிக்குது அதனால என்று சொன்னேன். "ஆமா இவரு பெரிய எம்ஜிஆர் கலரு" என அவர் தட்டி விட்டு விட்டார். சாப்பாடு மொத்தமும் கீழே கொட்டி நான் ஒரு அரை மணி நேரம் அங்கேயே நின்று தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறேன். அந்த அண்ணனை பிடித்து சட்டை எல்லாம் கிழித்து கோபத்தில்... அவ்வளவு பசியில் இருக்கிறார்கள் மூன்று தங்கச்சிகள் இருக்கிறார்கள் அந்த தருணம்...  பசி உடைய வலியும் வேதனையும் தெரிந்ததால் தான்.  தான் இப்போது வியாழக்கிழமைகளில் அன்னதானம், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அன்னதானம் போடுகிறேன். என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இன்னும் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்ட ராகவா லாரன்ஸின் அந்த முழு பேட்டி இதோ…
 

'ரோலக்ஸ் சார் எங்கே?'- வந்தியத்தேவனில் இருந்து டில்லியாக மாறிய கார்த்தி... பொன்னியின் செல்வன் 2 விழாவில் சூர்யாவின் கங்குவா பட அதிரடி அப்டேட்!
சினிமா

'ரோலக்ஸ் சார் எங்கே?'- வந்தியத்தேவனில் இருந்து டில்லியாக மாறிய கார்த்தி... பொன்னியின் செல்வன் 2 விழாவில் சூர்யாவின் கங்குவா பட அதிரடி அப்டேட்!

சினிமா

"பேசுவதற்கு நிறைய இருக்கிறது!"- பொன்னியின் செல்வன் 2 மேடையில் த்ரிஷா கொடுத்த லியோ பட மாஸ் அப்டேட்! விவரம் இதோ

நான் நேற்று வந்த இயக்குனர்... AK62 அவருக்கு திருப்புமுனையாக இருக்கும்!- மகிழ் திருமேனி பற்றி மனதிலிருந்து பேசிய விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ
சினிமா

நான் நேற்று வந்த இயக்குனர்... AK62 அவருக்கு திருப்புமுனையாக இருக்கும்!- மகிழ் திருமேனி பற்றி மனதிலிருந்து பேசிய விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ