'ஒரே TAKEல பண்ணாரு!'- சிலம்பரசன்TR நடிப்பில் FEEL-ஆன பிரிட்டிஷ் கேமராமேன்... மறக்க முடியாத போடா போடி பட நினைவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

மறக்க முடியாத போடா போடி பட நினைவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்,vignesh shivan shared podaa podi experience with silambarasan tr | Galatta

தனது 22 வது வயதில் இயக்குனராக முதல் படத்திற்கு கையெழுத்திட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு 27 வது வயதில் அந்த படத்தை முடித்தார். அதுதான் போடா போடி திரைப்படம். ஆனால் எதிர்பார்த்த அளவிலான மிகப்பெரிய வரவேற்பை போடா போடி திரைப்படம் அந்த சமயத்தில் பெற தவறியது. இருப்பினும் இவரது இயக்கத்தில் தொடர்ந்து வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் & காத்து வாக்குல ரெண்டு காதல்  ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பற்றி சூப்பர் ஹிட் ஆனது.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது திரை பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படங்களிலிருந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காட்சி ஒளிபரப்பப்பட்டு அது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த வகையில் போடா போடி திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR நடித்த எமோஷனலான காட்சி ஒன்று குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கேட்டபோது, “அது அவர்தான்… சிம்பு சார் பயங்கரமாக நடித்து விட்டார். அதை ஒரே டேக்கில் நடித்துவிட்டார். ஒரே ஷாட்… டயலாக்கை முழுவதுமாக சொல் என கேட்டார். நான் சொன்னேன் சரி ஓகே ரெடி என சொல்லிவிட்டு போய் ஒரே ஷாட்ட்டில் இரண்டு கேமராக்கள் வைத்தோம் ஒன்று குளோசப் இன்னொன்று வைத்தோம். ஒரே ஷாட்டில், நடித்து முடித்தார். அதை படம் பிடித்துக் கொண்டிருந்தவர் ஒரு பிரிட்டிஷ் கேமராமேன், அவரே ஒரு மாதிரி ஃபீல் ஆகிவிட்டார். போடா போடி திரைப்படத்தில் நான் என்ன முயற்சி செய்தேன் என்றால் வழக்கமாக காதல் கதைகளில் இரண்டு பேர் வந்தார்கள் காதலித்தார்கள் கடைசியில் எப்படி சேர்ந்தார்கள் என்பது தான் க்ளைமேக்ஸாக இருக்கும். ஆனால் போடா போடி படத்தில் எப்படி இருக்கும் என்றால், இரண்டு பேரும் சேர்ந்து விடுவார்கள் முதல் காட்சியிலேயே, அதன்பிறகு என்ன என்பதை நகர்த்துவது தான் கடினமாக இருக்கும். சரி அதற்குள் எதையாவது தேடலாம்… இடைவெளியின் போது குழந்தை பிறக்கும். ஒரு இளம் ஜோடி அவர்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது அதன் பிறகு என்ன இப்படி ஒன்றாகிறது. அதன் பிறகு அந்த பெரிய சூழ்நிலையை எப்படி கடந்து வருகிறார்கள். அதன் பிறகு வாழ்க்கை எப்படி போனது. என்பது மாதிரியான ஒரு சோதனை முயற்சி தான். அப்போது இந்த படம் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஆனால் இப்போது பலர் வந்து சார் எனக்கு உண்மையில் போடா போடி திரைப்படம் மிகவும் பிடிக்கும் என சொல்கிறார்கள். ஒரு பத்து வருடங்கள் முன்பு சொல்ல கூடாதா.." என கலகலப்பாக பதிலளித்தார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு பேட்டி இதோ…
 

நான் கார் துடைக்கிற பையன் தானே... வாழ்க்கையை மாற்றிய ஐஸ்கிரீம் பற்றி பேசிய ராகவா லாரன்ஸின் பக்கா மாஸ் வீடியோ இதோ!
சினிமா

நான் கார் துடைக்கிற பையன் தானே... வாழ்க்கையை மாற்றிய ஐஸ்கிரீம் பற்றி பேசிய ராகவா லாரன்ஸின் பக்கா மாஸ் வீடியோ இதோ!

சத்துணவு சாப்பாட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்ற ராகவா லாரன்ஸ்... பசியின் வலி குறித்து பேசிய எமோஷனலான வீடியோ இதோ!
சினிமா

சத்துணவு சாப்பாட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்ற ராகவா லாரன்ஸ்... பசியின் வலி குறித்து பேசிய எமோஷனலான வீடியோ இதோ!

இவங்க WEDDINGல நிறைய பேர் பேசாத விஷயம் என்னன்னா?- விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் செயல் குறித்து பேசிய பிரபலம்! விவரம் உள்ளே
சினிமா

இவங்க WEDDINGல நிறைய பேர் பேசாத விஷயம் என்னன்னா?- விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் செயல் குறித்து பேசிய பிரபலம்! விவரம் உள்ளே