குஜராத்தில் பிறந்து தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக அசத்தி வருபவர் பூஜா ஜாவேரி.துணை டான்ஸ் கலைஞராக தொடங்கி பின்னர் மாடல் ஆக அறிமுகமாகி பல முன்னணி விளம்பர படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் பூஜா ஜாவேரி.

தெலுங்கில் நடிகையாக அறிமுகமான இவர் தமிழ்,குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.விஜய் தேவரகொண்டா நடித்த துவாரகா படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இவர் நடித்துள்ள சில படங்கள் விரைவில் வெளிவரவுள்ளன.

சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் அடுத்ததாக நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்தார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது சில புகைப்படங்களுடன் ஒரு நற்செய்தியை பகிர்ந்துள்ளார்.

இவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது என சில புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.மாப்பிள்ளை பெயர் உள்ளிட்டவற்றை அவர் இன்னும் பகிரவில்லை.இவருக்கு பல பிரபலங்களும்,ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.