தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனரான இயக்குனர் செல்வராகவன் முதல்முறை கதாநாயகனாக களமிறங்கியுள்ள திரைப்படம் சாணிக் காணிதம். செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ஆயுதம் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். முன்னதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ராக்கி.

RA ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ்குமார் தயாரித்துள்ள ராக்கி திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டப்பிங் கலைஞர் ரவீனா ரவி மற்றும் நடிகை ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட ராக்கி திரைப்படம் கடந்த டிசம்பர் 23-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியானது. அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ராக்கி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு தற்போது திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராக்கி திரைப்படத்தை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக இயக்குனர் விக்னேஷ் சிவனையும் ராக்கி படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டினார். மேலும் இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் வசந்த் ரவி ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டியுள்ளார். ரஜினிகாந்த்-பாரதிராஜா சந்திப்பின் புகைப்படம் இதோ...