தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு வரும் பொங்கல் தீபாவளி என்றுதான் சொல்ல வேண்டும். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான அஜித்குமார் மற்றும் தளபதி விஜயின் துணிவு மற்றும் வாரிசு என இரண்டு திரைப்படங்களும் வரும் பொங்கல் வெளியீடாக ரசிகர்களை மகிழ்விக்க வருகின்றன.

போனி கபூர் தயாரிப்பு இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையலைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. முன்னதாக வெளிவந்த துணிவு படத்தின் ட்ரெய்லரும் பெரும் எதரிபார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் விஸ்வநாத் உத்தப்பா நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் துணிவு திரைப்படம் குறித்தும், நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றியது குறித்தும், பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், "துணிவு திரைப்படத்திற்கான தேர்வுக்கு சென்று வாய்ப்பு கிடைத்த அதே சமயத்தில் தனக்கு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் மெகா ஹிட் வெப்சீரிஸான ஹர்ஷத் மேத்தா ஸ்காம் வெப் சீரிஸிலும் வாய்ப்பு கிடைத்ததாகவும் இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்பிய சமயத்தில் தனது மனைவி கூறிய ஆலோசனையாலும் அஜித் குமார் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதாலும் ஹர்ஷத் மேத்தா ஸ்கேன் வாய்ப்பை விட்டு விட்டு துணிவு படத்தில் நடித்ததாக" நடிகர் விஸ்வநாத் உத்தப்பா தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…