அஜித்தின் துணிவு பட படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி, துணிவு டிரெய்லரின் டைம்லைன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

அஜித் குமார் நடித்து பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படம் 'துணிவு'. வலிமை படத்தை அடுத்து இயக்குநர் ஹெச்.வினோத் அஜித்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கும் இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு, விஜய் வேலுகுட்டி. சண்டைக்காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைத்துள்ளார். கலை இயக்குநராக மிலன் பணியாற்றியுள்ளார். மேலும் கல்யாண் இப்படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். துணிவு படத்திலிருந்து இதுவரை 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா' மற்றும் 'கேங்க்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

வங்கிக்கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் காணொலி கடந்த டிச.31ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள் விரும்பும்படியான அஜித்தை டிரெய்லரின் அனைத்து ஃப்ரேம்களிலும் காணமுடிந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மாஸ் ஆக்ஷன் மற்றும் சேஸிங் காட்சிகளுடன் வெளியாகியிருந்த இப்படத்தின் டிரெய்லர் இதுவரை யூடியூபில் 45 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. துணிவு படத்திற்கு தணிக்கைகுழுவினர் U/A சான்றிதழ் அளித்துள்ளனர்; மற்றும் படத்தின் நீளம் 145 நிமிடங்கள் மற்றும் 48 விநாடிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிரெய்லரின் 'Edit Timeline' புகைப்படத்தை துணிவு படத்தின் படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கிவருகின்றனர். 

டிரெய்லர் முழுவதும் தனது பிரத்தியேக அசைவுகள் மூலம் அஜித் காண்போரை கட்டிப்போட்டிருந்தார் என்று சொல்லலாம். "மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கிறியே... உனக்கு வெக்கமா இல்லையா" என்ற கேள்விக்கு நையாண்டிச் சிரிப்புடன், 'இல்ல' என்று அவர் சொல்வது தொடங்கி, டிரெய்லர் நெடுகிலும் அவர் பேசும் வசனங்கள், துள்ளலான நடனம், வில்லத்தனத்துடன் எதிரிகளை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளும் ஸ்டைல் என அஜித்தின் பரிமாணம் அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது என்றே கூறலாம். இந்நிலையில், விஜய் வேலுக்குட்டி எடிட் செய்த டிரெய்லரின் Timeline புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளதை ரசிகர்கள் இணையத்தில் வேகமாகப் பகிர்ந்துவருகின்றனர்.

தமிழின் உச்சநட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜயின் படங்கள் பொங்கலை முன்னிட்டு நேருக்குநேர் மோதவுள்ளது தமிழ்சினிமா ரசிகர்களால் முக்கியநிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. விஜயின் வாரிசு படம் ஜனவரி 12ல் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், துணிவு படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆயினும் துணிவு படம் ஜனவரி 11ல் வெளியாகவிருப்பதாக இணையத்தில் தகவல்கள் உலாவருகின்றன. 

படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி ட்விட்டரில் பகிர்ந்துள்ள Timeline புகைப்படம் உங்கள் பார்வைக்கு. 
 

43Million timeline 😉#ThunivuTrailer #AjithKumar #HVinoth 🔥🔥🔥 pic.twitter.com/H2sRyPTZHb

— Vijay Velukutty (@editorvijay) January 3, 2023