அட்டகாசமான திரில்லர் கதைகளத்தில் மீண்டும் அருள்நிதி.. – மிரட்டலான ‘திருவின் குரல்’ படத்தின் டிரைலர் இதோ..

வெளியானது திருவின் குரல் பட டிரைலர் - Arulnithi Thiruvin kural trailer is here | Galatta

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து படத்திற்கு படம் ஆச்சர்யத்தை கொடுக்க கூடிய நடிகர் அருள்நிதி. கடந்த 2010 இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வம்சம்’ மண் மணம் கமழும் நேர்த்தியான கதையில் ஹீரோவாவாக அறிமுகமானார் நடிகர் அருள்நிதி.முதல் படத்திலே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அருள்நிதி தொடர்ந்து நேர்த்தியான வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். அதன்படி ஆரம்ப காலத்தில் அருள்நிதி ‘மௌன குரு’, ‘தகராறு’, ‘ஒரு கண்ணியம் மூணு களவானிகளும்’, ‘டிமாண்டி காலனி’, ‘ஆறாது சினம்’, ‘பிருந்தாவனம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘K13’ ஆகிய திரைப்படங்கள் அருள்நிதியை சிறந்த நடிகராக தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தியது. கடந்த ஆண்டு டி பிளாக், ‘தேஜாவு’, ‘டைரி’ ஆகிய மூன்று வித்யாசமான படங்களில் நடித்து ஆச்சர்யத்தையும் கொடுத்தார். ரசிகர்களின் நம்பிக்கையைஏமாற்றாத  அருள்நிதி தற்போது ‘டிமாண்டி காலனி 2’, கழுவேத்தி மூர்க்கன்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே நடிகர் அருள்நிதி பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் புதிய படம் ‘திருவின் குரல்’ அறிவிப்பு முன்னதாக வெளியானது. இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதி ராஜா நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் ஆத்மிகா, சுபத்ரா, மோனிகா சிவா, அஷ்ரப், ஏ ஆர் ஜீவா, சோமசுந்தரம், மகேந்திரன் மற்றும் முல்லையரசி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  படத்திற்கு ஒளிப்பதிவாளர் சிண்டோ ஒளிப்பதிவு செய்ய கணேஷ் சிவா பாடதொகுப்பு செய்துள்ளார். சாம் சி எஸ் இசையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

Presenting the raw & intense 🔪💥 TRAILER of #ThiruvinKural 📢 ⚕️

▶️ https://t.co/WYtU4hujJy

In Cinemas from 14 APRIL 2023 📽️

🌟 @arulnithitamil @offBharathiraja & @im_aathmika 🎬 @harishprabhu_ns 🎶 @SamCSmusic 🎥 @sintopoduthas ✂🎞 @thecutsmaker 💿 @thinkmusicindia pic.twitter.com/Vb0P6yk9vs

— Lyca Productions (@LycaProductions) April 3, 2023

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திருவின் குரல் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தந்தை மகன் பாசாத்திற்கு இடையே அட்டகாசமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் வாய் பேச முடியாதவராய் அருள்நிதி நடித்துள்ளார். மிரட்டலான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திருவின் குரல் படத்தின் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் கொண்ட டிரைலர் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.   

சினிமா

"நீங்க நடிக்க வேண்டாம் " முதல்நாள் படப்பிடிப்பில் சூரியிடம் வெற்றி மாறன்.. - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் வெற்றி கொண்டாட்டம் .. – படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்... வைரல் பதிவு இதோ..
சினிமா

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் வெற்றி கொண்டாட்டம் .. – படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்... வைரல் பதிவு இதோ..

கீழடி அருங்காட்சியகத்தில் திடீர் விசிட் அடித்த சூர்யா ஜோதிகா.. - வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

கீழடி அருங்காட்சியகத்தில் திடீர் விசிட் அடித்த சூர்யா ஜோதிகா.. - வைரலாகும் புகைப்படங்கள் இதோ..