விடுதலை பட உதவி இயக்குனர்களுக்கு வெற்றிமாறன் கொடுத்த பரிசு.. குவியும் பாராட்டுகள் – விவரம் இதோ..

உதவி இயக்குனர்களுக்கு பரிசு கொடுத்த வெற்றிமாறன்  விவரம் இதோ - Director vetri maaran surprise gift to assistant director | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில்  தற்போது அதிரடி ஆக்ஷன் கிரைம் திரில்லரில் இரண்டு பாகங்களாக உருவான திரைப்படம் ‘விடுதலை’. பிரபல நகைச்சுவை நடிகர் சூரியை கதையின் நாயகனாக முதல் முறையாக அறிமுகப்படுத்தி மேலும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். படத்தின் அறிவிப்பிலிருந்து மிகபெரிய எதிர்பார்ப்பை சுமந்து வந்த விடுதலை திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகி பெருமளவு ரசிகர்களின் பாராட்டை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து இப்படத்தில் பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், பிரகாஷ் ராஜ்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.மேலும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அதன்படி பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இன்று இணையத்தில் டிரெண்ட்டிங்கில் உள்ளது.

திரைப்படம் வெளியாகி முதல் நாளை நிறைவு செய்ததையடுத்து திரையரங்கம் பெரும் இடங்களில் ஹவுஸ் புல்லாகி மிகப்பெரிய ஒப்பனிங்கை பெற்றுள்ளது. இரண்டு ஆண்டுகள் காடு மலை என்று கடின உழைப்பை பார்த்த குழுவினருக்கு ரசிகர்கள் பெருமளவு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாகவே ஒரு திரைப்படம் வெற்றியடைந்தால் அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கும் அந்த படத்தின் வெற்றியை மேலும் உயர்தியவரருக்கும் படக்குழுவோ அந்த நடிகரோ பரிசு கொடுப்பது சமீப காலமாக தமிழ் சினிமாவில் அதிகம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்நிலையில் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் 25 பேருக்கு தங்க நாணயம் கொடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். முன்னதாக அசுரன் படத்தில் பணியாற்றியவர்களுக்கும் வெற்றிமாறன் தங்க நாணயம் பரிசாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Brand💥🔥 Our director #VetriMaaran sir has gifted gold coins to all technicians and actors... Im happy to be a part of #Viduthalai #ViduthalaiPart1 #ViduthalaiPart2 #ViduthalaiPart1FromToday pic.twitter.com/fmG2B6c99F

— Vicky (@powerpaandivkey) March 31, 2023

மேலும் தங்க நாணயத்துடன் ஒரு கிரவுண்ட் நிலம் உத்திரமேரூர் பகுதியில் வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடன் பணியாற்றியவர்களுக்கு ஆடம்பர பொருட்களை பரிசாக கொடுக்கும் இன்றிய திரையுலகில் மிக அவசியமான நிலத்தை பரிசாக கொடுத்திருப்பதால் இணையத்தில் வெற்றிமாறன் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் வெற்றி கொண்டாட்டம் .. – படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்... வைரல் பதிவு இதோ..
சினிமா

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் வெற்றி கொண்டாட்டம் .. – படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்... வைரல் பதிவு இதோ..

கீழடி அருங்காட்சியகத்தில் திடீர் விசிட் அடித்த சூர்யா ஜோதிகா.. - வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

கீழடி அருங்காட்சியகத்தில் திடீர் விசிட் அடித்த சூர்யா ஜோதிகா.. - வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

எனக்கு விஜய் சேதுபதி பெரிய ஸ்டார் னு தோனல..
சினிமா ஸ்பெஷல்ஸ்

எனக்கு விஜய் சேதுபதி பெரிய ஸ்டார் னு தோனல.." விடுதலை பட நடிகை பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – வைரலாகும் வீடியோ இதோ..