சித்தார்த்தின் வெறித்தனமான நடிப்பில் ‘டக்கர்’.. அட்டகாசமான சிறப்பு காட்சியை வெளியிட்ட படக்குழு – வைரல் வீடியோ உள்ளே..

டக்கர் படத்தின் சிறப்பு காட்சியை வெளியிட்ட படக்குழு வீடியோ உள்ளே - Siddharth takkar movie sneak peek out now | Galatta

சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வரும் இளம் நடிகர்களில் மிக முக்கியமானவர் சித்தார்த். பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானதில் இருந்து இன்று வரை அதே துள்ளலான நடிப்புடன் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சித்தார்த் முன்னணி நடிகராக வலம் வருபவர். இடையே சில காரங்களினால் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த சித்தார்த் தற்போது தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் சித்தார். மேலும் நயன்தாரா மாதவன் மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் ஒன்று திரளும் ‘டெஸ்ட்’ படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். அதை தொடர்ந்து சித்தா என்ற படத்திலும் நடிக்கவுள்ளார் நடிகர் சித்தார்.

இதனிடையே நடிகர்  சித்தார்த் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘டக்கர்’. கலகலப்பான காமெடி திரைப்படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் அவர்களின்  அடுத்த படமாக உருவாகியுள்ள டக்கர் படத்தில் சித்தார்த் அவர்களுடன் இணைந்து திவ்யன்ஷா, யோகி பாபு, அபிமன்யூ சிங், முனிஸ்காந்த், ஆர் ஜே விக்னேஷ் காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். PASSION STUDIOS தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய ஜிஏ கௌதம் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.  முன்னதாக இப்படத்தின் பாடல்கள் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் காதல் கதையாக உருவாகியுள்ள டக்கர் திரைப்படத்தில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் படைத்த்க்ஹில் ஓடம் பெற்றுள்ள சுவாரஸ்யமான காட்சியை தற்போது வெளியிட்டுள்ளது.

முன்னதாக படம் வெளியாவதற்கு முன்பே 6 எபிசோடுகளாக முக்கிய காட்சிகள் வெளியடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சித்தார்த், நாயகி திவ்யன்ஷா ஆகியோரின் அறிமுக காட்சியினை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது படத்தில் இடம் பெற்ற

நாளை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள பக்கா ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் டக்கர் திரைப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது. காதல் கதையுடன் ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும் டக்கர் திரைப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் படக்குழு வித்யாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி, இந்தியாவின் முதல் முறையாக திரைப்படத்த்தில் இடம் பெற்றுள்ள முக்கிய காட்சிகளை தொடராக இணையத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி 6 எபிசோடுகளை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.. அதில் முதல் படியாக டக்கர் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சியினை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது படக்குழு 3வது எபிசோடான ‘RJ Laddu – Death Campanion’ என்ற காட்சியினை வெளியிட்டுள்ளது . தற்கொலைக்கு முற்படும் சித்தார்த்திடம் ஆறுதலாய் பேச வந்த ஆர்ஜே விக்னேஷ் காந்த் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து உருவாகியுள்ளது இந்த எபிசொட்.

 

கார் வாங்கிய 3 நாட்களிலே நடந்த சம்பவம்.. விரக்தியில் மாநாடு பட ஒளிப்பதிவாளர் எடுத்த முடிவு .. - விவரம் உள்ளே..
சினிமா

கார் வாங்கிய 3 நாட்களிலே நடந்த சம்பவம்.. விரக்தியில் மாநாடு பட ஒளிப்பதிவாளர் எடுத்த முடிவு .. - விவரம் உள்ளே..

‘கஸ்டடி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? - தளபதி 68 பட இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட கலகலப்பான வீடியோ உள்ளே..
சினிமா

‘கஸ்டடி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? - தளபதி 68 பட இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட கலகலப்பான வீடியோ உள்ளே..

இரண்டு நாட்கள் திரையரங்குகள் செயல்படாது..! போராட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்கள்.. – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணி இதோ..
சினிமா

இரண்டு நாட்கள் திரையரங்குகள் செயல்படாது..! போராட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்கள்.. – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணி இதோ..