“அடுத்த 10 வருஷத்துக்கு லோகேஷ் கிட்ட கதை இருக்கு” – LCU குறித்து ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சுவாரஸ்யமான வீடியோ..

லோகேஷ் கனகராஜ் குறித்து ஆர் ஜே பாலாஜி கருத்து - RJ balaji about Lokesh kanagaraj LCU concept | Galatta

பிரபல நடிகரும்  ஆர்.ஜே வுமான நடிகர் ஆர் ஜே பாலாஜி  'ரன் பேபி ரன்' திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக திரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனடிப்படையில் படத்திற்கு தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இப்படத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் இனைந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகிய ரன் பேபி ரன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி ரன் பேபி ரன் திரைப்படம் குறித்தும் மற்றும் அவரது திரைப்பயணம் குறித்தும் நமது கலாட்டா தமிழ் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அதில் லோகேஷ் கனகராஜுடனான  நட்பு குறித்து கேட்கையில்,

அவர்  “லோகேஷ் கனகராஜ் ஒரு நண்பரா தாண்டி அவர ஏன் எனக்கு பிடிக்கும்னா அவர் எப்பவும் எல்லோருக்கும் இணக்கமா இருப்பாரு. நெருக்கமான நண்பர்கள், குடும்பங்கள் மட்டுமல்லாமல் அவர் கீழ் வெலை செய்றவங்க கிட்டயும் அவர் அப்படிதான் இருப்பாரு..ஒரு வேலைய சின்சியரா எடுத்து பன்றவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் செம்ம சின்சியரா வேலை பார்ப்பாரு.. அவரோட பிளானிங்.. அடுத்தவங்களோட நேரத்துல மதிக்குற விதம்.. எல்லாமே நல்லாருக்கும்.  அவரோட நான் பயணிக்கும்போது அவரோட படங்கள் குறித்து பேசுவார் அப்போ எனக்கு ரொம்ம பெருமையா இருக்கும்.

அடுத்த பத்து வருஷத்துக்கு அவர்கிட்ட கதை இருக்கு.. அவர்கிட்ட அவ்ளோ idea இருக்கு . அந்த LCU இந்தியாவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறும்.‌ அதற்கு சும்மா idea மட்டும் இருந்தா போதாது. அதற்கான வேலை செய்யனும். அதற்கான வேலையையும் செய்வார். ஒரு நண்பரா எனக்கு ரொம்ப சந்தோஷம்.ஆனால் பொதுவெளியில் அந்த நட்பை காட்டிக் கொள்வது இல்லை. அது எங்கள் இரண்டு பேருக்கும் கூச்சமாக இருக்கும். இது போன்ற தருணத்தில் அவரை பற்றி பகிர்ந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் விஜயுடன் இணைந்து பணியாற்றி வரும் ‘தளபதி 67’ தற்போது இந்திய திரையுலகில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விஜய் ,லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணையும் இரண்டாவது படமான தளபதி 67 படத்தில் அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படம் லோகேஷ் கனகராஜின்  LCU பிரிவில் உருவாகவுள்ளதால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் இப்படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கெளதம் மேனன் மற்றும் மன்சூர் அலிகான் நடிக்கவிருக்கின்றனர். மேலும் பல இந்திய நட்சத்திரங்களை நடிக்க வைப்பதில் பேச்சு வார்த்தையை படக்குழு நடத்தி கொண்டிருக்கிறது என்பது குறிப்படத்தக்கது

மேலும் இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த கொண்ட முழு வீடியோ இதோ..

போட்றா வெடிய.. சூர்யாவை இயக்கபோகும் பிரபல இயக்குனர் இவரா? - அட்டகாசமான அப்டேட்.. வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

போட்றா வெடிய.. சூர்யாவை இயக்கபோகும் பிரபல இயக்குனர் இவரா? - அட்டகாசமான அப்டேட்.. வைரலாகும் வீடியோ இதோ..

வேகமெடுக்கும் விஜய் - லோகேஷ் கனகராஜ் அதிரடி கூட்டணியின் தளபதி67 பட ஷூட்டிங்! வெறித்தனமான அப்டேட்
சினிமா

வேகமெடுக்கும் விஜய் - லோகேஷ் கனகராஜ் அதிரடி கூட்டணியின் தளபதி67 பட ஷூட்டிங்! வெறித்தனமான அப்டேட்

அஜித்தின் வேதாளம் பட கெட்டப்பில் மாஸ் காட்டும் சிரஞ்சீவி – வைரலாகும் சிரஞ்சீவி லுக் இதோ..
சினிமா

அஜித்தின் வேதாளம் பட கெட்டப்பில் மாஸ் காட்டும் சிரஞ்சீவி – வைரலாகும் சிரஞ்சீவி லுக் இதோ..