16 வயது சிறுவனுக்குச் சொந்த அத்தையே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுவன் ஒருவன், தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். அந்த சிறுவன், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான்.

இந்த நிலையில் தான், “எனது அத்தை எனக்குத் தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்” என்று, குழந்தைகள் நல அமைப்புக்குத் தகவல் கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறுவனின் வில்லிவாக்கம் வீட்டிற்கு விரைந்து வந்த குழந்தைகள் நல அமைப்பினர், சிறுவனைத் தனியாக அழைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். 

அப்போது, சிறுவன் மிது சபலப்பட்ட அவரது அத்தை, அந்த சிறுவனுக்குத் தினமும் இரவு நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை, அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதனையடுத்து, அந்த சிறுவனின் நிலைமை குறித்து குழந்தைகள் நல அமைப்பு குழுவினருக்கு அந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்ததன் பேரில், அந்த அதிகாரிகள் சில அதிரடியான நடவடிக்கையில் இறங்கினார்கள்.

அதே நேரத்தில், சிறுவனை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குழந்தைகள் நல அதிகாரிகள், அங்கு சிறுவன் அளித்த புகாரின் பேரில், அவரது அத்தையின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஷ

அதன் தொடர்ச்சியாக, சிறுவனின் அத்தையைக் கைது செய்ய போலீசார் முற்பட்டபோது, அந்த பெண் ஏற்கனவே சொத்து தகராறில் கடந்த 5 ஆம் தேதியில் இருந்து சிறையில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. 

இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சிறுவனின் அத்தையிடம் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.

இதனிடையே, 16 வயது சிறுவன் ஒருவன், தனது அத்தை தன்னிடம் பாலியல் தொந்தரவு செய்து வருவதாகக் குழந்தைகள் நல அமைப்பில் புகார் கூறிய நிலையில். அந்த பெண் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.