தனுஷின் 'வாத்தி' உருவான விதம்.. அட்டகாசமான Making Video வை வெளியிட்ட படக்குழு – ரசிகர்களால் வைரல்.. விவரம் இதோ..

வைரலாகும் வாத்தி படம் உருவாக்கம் வீடியோ - Vaathi Making Video goes Viral | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். அட்டகாசமான நடிப்பின் மூலம் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களை உற்சாகப்படுத்திய இவர் தனகேன்ற தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் பிஸியாக  நடித்து வரும் தனுஷ். ஹாலிவுட்டிற்கும் சென்று தன்னை மிகப்பெரிய நட்சத்திரமாக நிலை நிறுத்தியுள்ளார். தற்போது தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் அவரே நடிக்கவுள்ளார். இது தனுஷுக்கு 50 வது திரைப்படமாக அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்நிலையில் இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப் பட்ட வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 17 ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. விமர்சன ரீதியாக தமிழ் நாட்டிலும் தெலுங்கானா மற்றும் ஆந்திர பகுதிகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இதுவரை 100 கோடிக்கும் மேல் உலகெங்கிலும் வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா,சமுத்திரக்கனி, சாய்குமார், கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் J.யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் தெலுங்கு மற்றும் தமிழில் மிகப்பெரிய ஆதரவை பெற்று இன்னும் டிரெண்டிங் கில் இருந்து வருகிறது.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக வெளியான வாத்தி திரைப்படம் இன்று முதல் பிரபல ஒடிடி தளமான Netflix தளத்தில் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  வாத்தி திரைப்படம் உருவான விதம் மற்றும் படப்பிடிப்பு தளத்தின் வீடியோவை சிறப்பு தொகுப்பாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

“சூர்யா 42 முக்கியமான படமாக இருக்க போகுது..” மதன் கார்க்கி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – வைரலாகும் முழு வீடியோ இதோ..
சினிமா

“சூர்யா 42 முக்கியமான படமாக இருக்க போகுது..” மதன் கார்க்கி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – வைரலாகும் முழு வீடியோ இதோ..

தரமணி - ராக்கி - ஜெயிலர் வரிசையில் வசந்த் ரவி நடிக்கும் புதிய சைக்கலாஜிக்கல் ஹாரர் படம்! விவரம் உள்ளே
சினிமா

தரமணி - ராக்கி - ஜெயிலர் வரிசையில் வசந்த் ரவி நடிக்கும் புதிய சைக்கலாஜிக்கல் ஹாரர் படம்! விவரம் உள்ளே

'அவள்' Vibe க்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா.. சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த தகவல்,, – அட்டகாசமான நேர்காணல் இதோ!
சினிமா

'அவள்' Vibe க்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா.. சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த தகவல்,, – அட்டகாசமான நேர்காணல் இதோ!