வருகிறார் வந்தியத்தேவன்.. பொன்னியின் செல்வன் 2 படத்தின் 1st Single அப்டேட்.. – வைரலாகும் அட்டகாசமான போஸ்டர் இதோ..

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் இதோ - Special poster from Ponniyin selvan part 2 with first single update | Galatta

இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் அவர்களின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை உலகளவில் பெற்று தந்தது. தமிழ் மொழியின் தலைசிறந்த நாவலாசிரியர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை கொண்டு எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. லைகா நிறுவனம் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்  சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி , திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரபு, லால், பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், அஷ்வின் காக்கமனு மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திரிந்தனர். பிரமாண்டமான உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்தார். மேலும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் முதல் படத்தின் பாடல் மிகப்பெரிய அளவு வரவெற்பு பெற்று அதிகம் பேசப்பட்டது.

முதல் பாகத்தில் அட்டகாசமான போர் உணர்வையும் போர் களத்தையும் காட்டிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் இந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் குந்தவைக்கும் வந்தியத்தேவனுக்கும் இடையே உள்ள காதலை உணர்த்தும் பாடலாக இடம் பெற்றிருந்த ‘அகநக’ பாடல் அன்று மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றது.  இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இப்பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடிய அகநக பாடலின் முழு நீள பாடலை இரண்டாம் பாகத்தின் முதல் பாடலாக வரும் மார்ச் 20 ம் தேதி மாலை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.இந்த அறிவிப்புடன் கார்த்தி, திரிஷா இடம் பெற்றிருந்த  அட்டகாசமான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு  இதனையடுத்து இந்த பதிவு மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.

Get ready to experience the magic of #AgaNaga in all its glory! 20th March. 6 PM. Stay tuned!

🎤: @ShakthisreeG
✍🏻: @ilangokrishnan #PS2 #PonniyinSelvan #CholasAreBack #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @PrimeVideoIN pic.twitter.com/jhJ0KLk0Pd

— Lyca Productions (@LycaProductions) March 17, 2023

 

முன்னதாக அகநக பாடலின் முழு பாடலையும் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் அப்போது ஏ ஆர் ரஹ்மானிடம் கேட்டிருந்தனர். இதனையடுத்து அகநக பாடல் முழு பாடலாக இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. மிகபிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28 ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர்.. – வைரலாகும் அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர்.. – வைரலாகும் அட்டகாசமான அப்டேட் இதோ..

தனுஷின் 'வாத்தி' உருவான விதம்.. அட்டகாசமான Making Video வை வெளியிட்ட படக்குழு  – ரசிகர்களால் வைரல்.. விவரம் இதோ..
சினிமா

தனுஷின் 'வாத்தி' உருவான விதம்.. அட்டகாசமான Making Video வை வெளியிட்ட படக்குழு – ரசிகர்களால் வைரல்.. விவரம் இதோ..

உதயநிதி ஸ்டாலினின் விறுவிறுப்பான கண்ணை நம்பாதே... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அசத்தலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
சினிமா

உதயநிதி ஸ்டாலினின் விறுவிறுப்பான கண்ணை நம்பாதே... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அசத்தலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!