பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கருக்கு நடந்தது என்ன? - வருத்ததுடன் ரசிகர்கள் பகிரும் வீடியோ.. - விவரம் இதோ..

உடல் மெலிந்த ரோபோ ஷங்கர் விவரம் இதோ - Comedy actor robo shankar weight loss video | Galatta

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்  ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் காமெடி நிகழ்சிகளில் மக்கள் மனதை கவர்ந்த ரோபோ ஷங்கர் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன்படி ‘தீபாவளி’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். அதன்பின் தனுஷ் நடிப்பில் கடந்த 2015 ம் ஆண்டு வெளியான ‘மாரி’ திரைப்படம் மூலம் சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமான காமெடியினால் தமிழ் சினிமா ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வந்தார். அதன்பின் அவர் தொடர்ந்து முக்கியமான திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். திரைத்துறையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல நிகழ்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார் ரோபோ ஷங்கர்.

ரசிகர்களின் ஆதரவை பெற்ற பிரபலங்கள் வரிசையில் ரோபோ ஷங்கர் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார் இந்நிலையில் ரோபோ ஷங்கர் அவரது எடையில் மூன்றில் ஒரு பங்காக மெலிந்து போய் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியடைய செய்தது.ரோபோ ஷங்கருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி ரசிகர்களிடம் பரவலாக எழுந்தது. உடல் நிலை சரியில்ல போன்ற பல வதந்திகளும் பரவி வந்தது. இந்நிலையில் ரோபோ ஷங்கர் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைத்து வருகிறார். வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று ரோபோ ஷங்கர் தரப்பிலிருந்து செய்தி வெளியானது. இதனையடுத்து ரசிகர்கள் ஆஸ்வசப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ரோபோ ஷங்கர்  அனுமதியின்றி அவர் வளர்த்து வந்த  அலெக்ஸ்சான்றியன் கிளிகளை பறிமுதல் செய்து ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தனர். இது தொடர்பாக ரோபோ ஷங்கர் மன வருத்தம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள..

வேகமெடுக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு  - விரைவில் வித்யாசமான கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார்.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

வேகமெடுக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு - விரைவில் வித்யாசமான கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார்.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

‘விலங்கு’  வெப் சீரிஸின் 2 வது சீசன் .. வைரலாகும் அட்டகாசமான அப்டேட்  - உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..
சினிமா

‘விலங்கு’ வெப் சீரிஸின் 2 வது சீசன் .. வைரலாகும் அட்டகாசமான அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..

தனுஷின் ‘வாத்தி’ படத்தில் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டது படக்குழு – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

தனுஷின் ‘வாத்தி’ படத்தில் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டது படக்குழு – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..