உதயநிதி ஸ்டாலினின் விறுவிறுப்பான கண்ணை நம்பாதே... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அசத்தலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே பட ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு,udhayanidhi stalin in kannai nambathey movie sneak peek video | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக தனது திரைப் பயணத்தை தொடங்கி பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்திலிருந்து கதாநாயகனாக களமிறங்கியவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகள் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக நெஞ்சுக்கு நீதி படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த, உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த கலகத் தலைவன் படமும் ஆக்ஷன் த்ரில்லர் படமாக ஹிட் ஆனது.

அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் மிக நேர்த்தியாக பணியாற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு ஒட்டுமொத்தமாக திரை உலகில் இருந்து விலகி முழு‌க்க முழு‌க்க மக்களுக்காக பணியாற்ற உள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். முன்னதாக பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்த திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் மாமன்னன் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாமன்னன் திரைப்படம் தான் நடிகராக தனது திரைப் பயணத்தில் கடைசி திரைப்படம் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளிவர உள்ள கண்ணை நம்பாதே திரைப்படத்திற்கு பிறகு தனது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து நடிகை ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க, ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா கஸ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ.கருப்பையா, சென்ராயன் உள்ளிட்டோர் கண்ணை நம்பாதே திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். LIPI CINE CRAFTS தயாரிப்பில் உருவாகி இருக்கும் கண்ணை நம்பாதே திரைப்படத்தில் ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, சித்து குமார் இசை அமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் கண்ணை நம்பாதே திரைப்படம் வருகிற மார்ச் 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.இந்நிலையில் கண்ணை நம்பாதே திரைப்படத்திலிருந்து விறுவிறுப்பான ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அந்த ஸ்னீக் பீக் வீடியோ இதோ…
 

'அவள்' Vibe க்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா.. சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த தகவல்,, – அட்டகாசமான நேர்காணல் இதோ!
சினிமா

'அவள்' Vibe க்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா.. சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த தகவல்,, – அட்டகாசமான நேர்காணல் இதோ!

விரைவில் ‘சூர்யா 42’ ப்ரோமோ! அட்டகாசமான அப்டேட்டை பகிர்ந்த பிரபலம்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் பதிவு இதோ..
சினிமா

விரைவில் ‘சூர்யா 42’ ப்ரோமோ! அட்டகாசமான அப்டேட்டை பகிர்ந்த பிரபலம்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் பதிவு இதோ..

பிரம்மாண்டமாக தயாராகும் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்… சர்ப்ரைஸாக வந்த புது ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!
சினிமா

பிரம்மாண்டமாக தயாராகும் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்… சர்ப்ரைஸாக வந்த புது ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!