அட்டகாசமான ஹாரர் காமெடியில் காஜல் அகர்வால் - ரசிகர்களை கவர்ந்து வரும் ‘கோஸ்ட்டி பட வீடியோ சாங் இதோ..

காஜல் அகர்வால் புது படத்தின் பாடல் வெளியானது விவரம் இதோ..- Kajal Aggarwal Ghosty movie song released | Galatta

தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். தமிழ் தெலுங்கு  இந்தி என மொழி படங்களிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். மேலும் அஜித், விஜய், கார்த்தி, சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வந்த நடிகை காஜல் அகர்வால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தைக்கு தாயானார். அதன் பின் திரைத்துறையில் இடைவெளி விட்ட காஜல் பின் மீண்டும் வருகை தந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் அதில் முக்கியமான திரைப்படம் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘கருங்காப்பியம்’, ‘உமா’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.  

தற்போது தமிழில் காஜல் அகர்வால் நடித்து ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கோஸ்ட்டி’ பிரபல காமெடி திரைப்படங்களான ‘குலேபகாவலி. ‘ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இப்படத்தை இயக்குகிறார். அட்டகாசமான காமெடி காட்சிகளுடன் உருவாகியுள்ள கோஸ்ட்டி படத்தின் டிரைலர் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

SEED PICTURES நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்க அவருடன் இணைந்து ஊர்வசி, யோகி பாபு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ரெட்டின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், சத்தியன், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, சந்தான பாரதி, லிவின்ஸ்டன், மதன் பாபு, மனோபாலா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருக்கின்றனர். 

வரும் மார்ச் 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள கோஸ்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சாம் சி எஸ் இசையில் கு கார்த்திக் வரிகளில் அந்தோனி தாசன் குரலில்  உருவான  ‘மைனாவ புடி’ பாடலின் வீடியோ சாங் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நிச்சயம் அட்டகாசமான நகைச்சுவை காட்சிகளுடன் ரசிகர்களை உற்சாகப் படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

புது கெட்டப்பில் அசத்தும் லெஜென்ட் சரவணன் .. ஒரு வேளை புது படமா இருக்குமோ? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

புது கெட்டப்பில் அசத்தும் லெஜென்ட் சரவணன் .. ஒரு வேளை புது படமா இருக்குமோ? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒருங்கிணைக்கும் மாபெரும் விழா நிறுத்தம்.. நடந்தது என்ன?.. – அதிர்ச்சியில் ரசிகர்கள் விவரம் உள்ளே..
சினிமா

ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒருங்கிணைக்கும் மாபெரும் விழா நிறுத்தம்.. நடந்தது என்ன?.. – அதிர்ச்சியில் ரசிகர்கள் விவரம் உள்ளே..

ஆஸ்கரை தட்டி தூக்கிய இந்தியாவின் முதல் படம்.. - அரங்கம் அதிரும் கைத்தட்டல்களுடன் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழு..விவரம் இதோ..
சினிமா

ஆஸ்கரை தட்டி தூக்கிய இந்தியாவின் முதல் படம்.. - அரங்கம் அதிரும் கைத்தட்டல்களுடன் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழு..விவரம் இதோ..